ETV Bharat / state

பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமனம்! - salem rural body election latest news

சேலம்: உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில், தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக என்று சேலம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் தெரிவித்துள்ளார்.

salem-collector-conducted-meet-on-election-observer-appointmentsபதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
author img

By

Published : Dec 24, 2019, 8:20 AM IST

சேலம் மாவட்டம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்படவுள்ளவர்களுக்கான தேர்தல் பணி குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி. அ.ராமன் முன்னிலையில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் பார்வையாளரான இயக்குநர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சி.காமராஜ், தலைமை வகித்தார்.

இது குறித்து காமராஜ் கூறுகையில்,"

"சேலம் மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, மாவட்ட காவல் துறையினரால் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் கண்டறியப்பட்ட பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் மூன்றில் ஒரு பங்கு வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யபடவுள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்கள், மத்திய அரசு உடைமையாக்கப்பட்ட அலுவலகங்கள், நிறுவங்களில் பணிபுரியும் பணியாளர்களில் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள் இத்தேர்தலில் பணியாற்றுவதற்கு நியமிக்கப்படவுள்ளனர்.

தேர்தல் நுண்பார்வையாளர்கள் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளை முழுமையாகக் கடைபிடித்து இத்தேர்தலில் சிறப்பாக பணியாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா. திவாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா. அருள்ஜோதி அரசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) இல. இளங்கோவன் உட்பட மத்திய அரசின் பணியில் உள்ள அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்க:

'அதிமுக வென்றால் அடிப்படை வசதிகள் விரைந்து செய்து முடிக்கப்படும்...!'

Intro:சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரன தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்படவுள்ள மத்திய அரசு பணியாளர்களுக்கான தேர்தல் பணி குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் சி.அ.ராமன் முன்னிலையில் சேலம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் / இயக்குநர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சி.காமராஜ், தலைமையில் இன்று நடைபெற்றது. Body:

         சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரன தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்படவுள்ள மத்திய அரசு பணியாளர்களுக்கான தேர்தல் பணி குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் சி.அ.ராமன் முன்னிலையில் சேலம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் / இயக்குநர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சி.காமராஜ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இது குறித்து சேலம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் கூறுகையில்,"

         சேலம் மாவட்டத்தில் டிசம்பர் 2019 மாதத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின் படி சேலம் மாவட்ட காவல் துறையினரால் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் கண்டறியப்பட்ட பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் மூன்றில் ஒரு பங்கு வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யபடவுள்ளனர்.

         சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணிப்புரியும் பணியாளர்கள் / மத்திய அரசு மற்றும் மத்திய அரசு உடமையாக்கப்பட்ட அலுவலகங்கள் / நிறுவங்களில் பணிபுரியும் பணியாளர்களில் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள் இத்தேர்தலில் பணியாற்றுவதற்கு நியமிக்கப்படவுள்ளனர்.

         சேலம் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் கண்டறியப்பட்ட பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பணியமர்த்தப்படும் தேர்தல் நுண்பார்வையாளர்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளை முழுமையாக கடைபிடித்து இத்தேர்தலில் சிறப்பாக பணியாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. " என்று அவர் தெரிவித்தார்.

Conclusion:இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.திவாகர், மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.அருள்ஜோதி அரசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) இல.இளங்கோவன் உட்பட மத்திய அரசின் பணியில் உள்ள அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.