ETV Bharat / state

சேலத்திற்கு வயது 155 : ஆர்ப்பாட்டங்களின்றி கொண்டாடப்பட்ட சேலம் தினம்! - சேலம் தினம்

சேலம் : கரோனா பொது முடக்கம் காரணமாக விழாக்கள் எதுவுமின்றி அமைதியான முறையில் சேலத்தின் 155ஆவது ஆண்டுவிழா அனுசரிக்கப்பட்டது.

155 ஆவது சேலம் தினம்
155 ஆவது சேலம் தினம்
author img

By

Published : Nov 2, 2020, 1:45 AM IST

155ஆவது சேலம் தினம் இன்று (நவ.01) கொண்டாடப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் முன்னோடி மாநகராக, 1866ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி சேலம் உருவெடுத்தது. அதன் அடையாளமாக ஆண்டு தோறும் நவம்பர் 1ஆம் தேதி சேலம் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், கரோனா பொது முடக்கம் காரணமாக விழாக்கள் எதுவுமின்றி அமைதியான முறையில் சேலத்தின் 155ஆவது ஆண்டுவிழா நேற்று (நவ.01) கொண்டாடப்பட்டது. சேலம் என்ற சொல்லுக்கு மலைகளால் சூழப்பட்ட இடம் என்று பொருள் . சைலம் என்பதே மருவி சேலம் என்றானது. சேர,சோழ, பாண்டிய மன்னர்கள், ஹைதர் திப்பு சுல்தான் ஆகியோர் சேலத்தை ஆட்சி செய்த வரலாறு இப்போதும் வரலாற்று ஆய்வாளர்களால் நினைவுகூரப்பட்டு வருகிறது.

155 ஆவது சேலம் தினம்

சேலம், பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் வந்த பிறகு பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. சேலம், நகரமாக வடிவமைக்கப்பட்டது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்தான். இது குறித்து நமக்கு பிரத்தியேகப் பேட்டி அளித்த சேலம் வரலாற்று சங்கத்தின் பொதுச்செயலாளர் பர்னபாஸ், சேலம் குறித்த பல்வேறு வரலாற்றுத் தகவல்களை விரிவாக நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

சேலம் வரலாற்று சங்கத்தின் பொதுச்செயலாளர் பர்னபாஸ்

மாம்பழம், இரும்பாலை, மேக்னசைட், ஏற்காடு, மேட்டூர் அணை என்று பல்வேறு அடையாளங்கள் இருந்தாலும், தற்போது சேலத்தில் புதிய அடையாளமாக மிக நீளமான புதிய ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆர், கண்ணதாசன், கருணாநிதி, சிவாஜி கணேசன் ஆகியோர் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் கலைஞர்களாகப் பணியாற்றியது சேலத்தின் இன்னொரு பெருமை. தற்போது தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி சேலத்தைச் சேர்ந்தவர் என்பது சேலத்திற்கான மற்றுமொரு பெருமை.

சேலம் தினத்தையொட்டி தனது அரசியல் நினைவுகளையும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றிய காலத்தின் நினைவுகளையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் முன்னாள் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.தேவதாஸ்.

முன்னாள் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் தேவதாஸ்.

வரலாற்று சிறப்புகளையும் நிகழ்கால பெருமைகளையும் தன்னகத்தே கொண்டு, இந்தியாவில் முன்னோடி மாநகராக, 155ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்து வீரநடை போடும் சேலத்திற்கு வாழ்த்துகள்!

இதையும் படிங்க: 'மனைவிக்கு சிலை வைத்து வழிபடும் முன்னாள் ராணுவ வீரர்: நிகழ்கால ஷாஜகான் மாடசாமி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.