ETV Bharat / state

எடப்பாடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை - Prohibited lottery ticket sales in Edappadi

எடப்பாடி அருகே தடை செய்யப்பட்ட கேரள மாநில மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெற்றுவருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி, edappadi, Salem, சேலம், சேலம் மாவட்டச்செய்திகள், எடப்பாடியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை, Prohibited lottery ticket sales in Edappadi, lottery tickets sales in salem edappadi
prohibited-lottery-ticket-sales-in-edappadi
author img

By

Published : Mar 21, 2021, 3:23 PM IST

சேலம்: எடப்பாடி அடுத்த ஜலகண்டபுரம், வண்டிமேடு பகுதியில் அரசு மருத்துவமனை பின்புறம் குடியிருப்புகள் உள்ளன. அங்கு சுருட்டுக்கடை ஜான் என்பவரின் வீட்டில் சட்டவிரோதமாக கேரளா மாநில மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துவருகின்றனர். லாட்டரி சீட்டு வாங்க, வாடிக்கையாளர்கள், தினமும் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

தமிழ்நாடு அரசு, லாட்டரி சீட்டு விற்பனையை தடை செய்துள்ள நிலையிலும், ஜலகண்டபுரம் பகுதிகளில் மூன்று நம்பர் லாட்டரி விற்பனை நடந்து வருவது குறித்து, மக்கள் ஜலகண்டபுரம் காவல் நிலையதில் பலமுறை தகவல் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து லாட்டரி தொழிலால் பாதிக்கப்படும் அப்பாவிக் குடும்பங்களை பாதுகாக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: போலி நிறுவனம் நடத்தி 100 கோடி ரூபாய் மோசடி: இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.