ETV Bharat / state

ஒரு கிலோ ஆட்டுக்கறிக்கு ஒரு கிராம் வெள்ளி - புரட்டாசியை சமாளிக்க வியாபாரியின் புதுயுக்தி!

Latest Salem News சேலம்: புரட்டாசி மாதத்தில் அசைவ பிரியர்களை ஈர்க்க வெள்ளிக்காசு அளித்து அசத்தும் சேலத்து கறிக்கடை வியாபாரி.

salem
author img

By

Published : Oct 6, 2019, 6:31 PM IST

Latest Salem News: சேலம் மாவட்டம், தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பி.எம்.பாபு. இவரது குடும்பத்தினர் சேலத்தில் மூன்று தலைமுறைகளாக ஆட்டுக்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர், திருச்சி மெயின் ரோடு பிரபாத் அருகில் ஆட்டுக்கறி விற்பனை செய்து வருகிறார்.

அப்பகுதியிலுள்ள ஆட்டுக்கறி கடைகளை விட இவரது கடையில் ஆட்டுக்கறி கிலோவுக்கு ஐம்பது ரூபாய் குறைத்து விற்பனை செய்யப்படுவதால், எப்போதுமே இவரது கடையில் கூட்டம் நிறையும். இந்நிலையில், தற்போது புரட்டாசி மாதம் என்பதால் கறி விற்பனையில், இவருக்கு மந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், விற்பனையை அதிகரிக்க நுட்பமாக சிந்தித்த பி.எம்.பாபு, அவரது கடையில் ஒரு கிலோ ஆட்டுக்கறி வாங்குபவர்களுக்கு ஒரு கிராம் வெள்ளிக்காசு இலவசமாக வழங்கப்படும் என விளம்பரப்படுத்தினார்.

பாபுவின் கறிக்கடை

இதனையடுத்து, தற்போது அவரது கடையில் விற்பனை களைகட்டியுள்ளது. மேலும் இதுகுறித்து பாபு, 'புரட்டாசி மாதம் முடிந்தாலும், தீபாவளி வரை கறி வாங்கினால் வெள்ளிக்காசு வழங்க உள்ளதாக' அதிரடியாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:

இறைச்சி வியாபாரத்தைப் புரட்டிப் போட்ட புரட்டாசி!

Intro:புரட்டாசி மாதத்தில் அசைவ பிரியர்களை ஈர்க்க வெள்ளிக்காசு.
ஆட்டுக்கறி வியாபாரியின் பலே ஐடியா!

புரட்டாசி மாதத்தில் ஆட்டு கறி வியாபாரம் குறைந்ததால் கறி வாங்குபவர்களுக்கு வெள்ளிக்காசு வழங்கி ஆட்டுக்கறி விற்பனை செய்கிறார் சேலத்தை சேர்ந்த வியாபாரி.

Body:சேலம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாபு.49 வயதான இவர் பிரபாத் தியேட்டர் பகுதி அருகில் ஆட்டுக்கறி விற்பனை கடை வைத்துள்ளார். தற்போது புரட்டாசி மாதம் என்பதால் ஆட்டுக் கறி வியாபாரம் மந்த நிலையில் காணப்பட்டது.

இதனால் பாபு ஆட்டுக்கறி வாங்கினால் வெள்ளிக்காசு இலவசம் என விளம்பரப்படுத்தி னார். இது தவிர மற்ற கடைகளை விட விலை குறைத்து விற்பதால் இவருக்கு ஆட்டுக்கறி மற்ற நாட்கள் போலவே நடந்து வருகிறது.

மற்ற கடைகளில் வெள்ளாட்டுக் கறி கிலோ ரூபாய் 580 முதல் ரூபாய் 620 வரை விற்கப்படுகிறது. இதுதவிர செம்மறி ஆட்டு கறி கிலோ 450 ரூபாய் முதல் 550 வரை விற்கப்படுகிறது. ஆனால் பாபுவின் கறிக்கடையில் வெள்ளை ஆட்டுக்கறி மற்றும் செம்மறி ஆட்டு கறி கிலோ ரூபாய் 400க்கு மட்டுமே விற்கப்படுகிறது.

இது போல மற்ற கறி கடைகளில் குடல் கிலோ ரூபாய் 300 முதல் ரூபாய் 320 விற்கப்படுகிறது. ஆனால் பாபுவின் கடையில் 180 ரூபாய்க்கு மட்டும் விற்கிறார். தலைக்கறி கிலோ 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஒரு கிலோ ஆட்டுக்கறி வாங்கினால் ஒரு கிராம் வெள்ளி காசு பாபு வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார். இதனால் பாபுவின் கடையில் எப்போதும் கரி வாங்குவோரின் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. இந்த விற்பனை குறித்து கடை உரிமையாளர் பாபு கூறும்போது.
எனது குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறோம். மற்றவர்களைப் போல ஆடுகளை நான் வெளி மாநிலத்திற்கோ வெளி இடங்களுக்குச் சென்று வாங்குவதில்லை.

நாமக்கல் மாவட்டம் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைகளுக்கு சென்று விவசாயிகளை சந்தித்து குறைவான விலையில் ஆடுகளை வாங்கி வருகிறேன். எனது லாபத்தை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு விலை குறைந்த கறி விற்பதால் எனக்கு தனி வாடிக்கையாளர்கள் உருவாகியுள்ளனர். தற்போது புரட்டாசி மாதத்தை முன்னிட்டு ஒரு கிலோ கறி வாங்கினால் ஒரு கிராம் வெள்ளி காசு வாங்கி வருகிறேன்.

புரட்டாசி மாதம் முடிந்தாலும் தீபாவளி வரை கறி வாங்கினால் வெள்ளிக்காசு வழங்க உள்ளேன் என்றார் பாபு.

பேட்டி: பாபு - கடை உரிமையாளர்

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.