ETV Bharat / state

சேலத்தில் சிறை கைதிகளுக்கு புதுவாழ்வு அழிக்கும் திட்டம்! - salem central jail

சேலம்: சிறை கைதிகள் தயாரிக்கும் பன் வகைகளை அரசு மருத்துவமனைக்கு விற்பனை செய்ய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் சிறைக் கைதிகளுக்கு புதுவாழ்வு அழிக்கும் திட்டம்!
author img

By

Published : Oct 23, 2019, 11:22 PM IST

சிறைகளில் உள்ள கைதிகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தித் தர சிறைத் துறை நிர்வாகம் ஏற்பாடு செய்துவருகிறது. அதன்படி தமிழ்நாடு சிறைகளில் கைதிகளுக்கு பல்வேறு தொழில்கள் கற்றுத்தரப்படுகிறது.

அந்த வகையில், சேலம் மத்திய சிறையில், கைதிகள் பிரட் தயாரிக்க சிறிய தொழிற்சாலை ஒன்று சிறைக்குள் நிறுவப்பட்டுள்ளது. தற்போது இந்த பிரட் தொழிற்சாலை தொடங்கப்பட்டு தினமும் கைதிகள் மூலம் பிரட், பன், தேங்காய் பன் தயாரிக்கப்பட்டுவருகிறது. இவையனைத்தும் சிறைக்கு வெளியில் உள்ள சிறைக் கடையில் வைத்து விற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு பன் 5 ரூபாய்க்கும் பிரட் வகைகள் 25 ரூபாய்க்கும் தேங்காய் பன் ரூபாய் 30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பன் வகைகளை வேறு கடைகளுக்கு சப்ளை செய்ய சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

சேலத்தில் சிறை கைதிகளுக்கு புதுவாழ்வு அழிக்கும் திட்டம்!

இதனையடுத்து இனி மாதந்தோறும் இரண்டு டன் பிரட்களை சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வழங்க உத்தரவிட்டிருக்கிறது. 200 கிராம் ரூ.12.50-க்கு விற்க விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இனி மாதந்தோறும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானம் சேலம் மத்திய சிறைக்கு கிடைக்க உள்ளது. இந்த வருமானத்தில் பிரட், பன் தயாரிக்கும் கைதிகளுக்கு ஒரு தொகை வழங்கவும் சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சேலம் கைதிகளுக்கு கிடைத்துள்ள இந்தப் புது முயற்சிக்கு பலரும் பாராட்டும் தெரிவித்துவருகிறார்கள்.

Intro:சேலம் மத்திய சிறை கைதிகளுக்கு புதுவாழ்வு.

அரசு மருத்துவமனைக்கு மாதம் மாதம் 2 டன் பிரட் வழங்க உத்தரவு.

Body:சிறைகளில் உள்ள கைதிகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தித் தர சிறைத்துறை நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இதன்படி தமிழக சிறைகளில் கைதிகளுக்கு பல்வேறு தொழில்கள் கற்றுத்தரப்படுகிறது.

இதேபோல சேலம் மத்திய சிறையில் கைதிகள் பிரட் தயாரிக்க சிறிய தொழிற்சாலை ஒன்று சிறைக்குள் நிறுவப்பட்டது. தற்போது இந்த பிரட் தொழிற்சாலை தொடங்கப்பட்டு தினமும் கைதிகள் மூலம் பிரட் மற்றும் பன், தேங்காய் பன் தயாரிக்கப்பட்டு வருகிறது.

சேலம் மத்திய சிறையில் தயார் செய்யப்படும் பிரட் மற்றும் மண் வகைகள் சிறையின் வெளிப்புறம் உள்ள சிறை கடையில் வைத்து விற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருவன் 5 ரூபாய்க்கும், பிரட் வகைகள் 25 ரூபாய்க்கும், தேங்காய் பன் ரூபாய் 30க்கும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுதவிர கோவை சிறையில் இருந்து அனுப்பி வைக்கப்படும் தேங்காய் எண்ணெய் பாட்டில்கள் மற்றும் பைகளும் சிறை அருகே உள்ள கடையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சிறையில் பன் மற்றும் பிரட் வகைகள் அதிகம் உற்பத்தி செய்யப்படுவதால் இந்த விரட் மற்றும் வேறு கடைகளுக்கு சப்ளை செய்ய சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் அரசுக்கு தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இனி மாதம் மாதம் இரண்டு டன் பிரட் களை சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வழங்க உத்தரவிட்டிருக்கிறது. 200கிராம் ரூபாய் 12.50க்கு விற்க விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி மாதம் மாதம் ரூபாய் ஒரு லட்சத்து 25 ஆயிரம் வருமானம் சேலம் மத்திய சிறைக்கு கிடைக்க உள்ளது. இந்த வருமானத்தில் பிரட் மற்றும் பன் தயாரிக்கும் கைதிகளுக்கு ஒரு தொகை வழங்கவும் சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் கைதிகளுக்கு கிடைத்துள்ள இந்த புது முயற்சிக்கு பலரும் பாராட்டும் தெரிவித்து வருகிறார்கள்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.