சென்னை சேப்பாக்கத்தை அடுத்து, பிரமாண்ட கிரிக்கெட் மைதானம் சேலத்தில் உருவாகியுள்ளது. பத்து பேர் கொண்ட குழுவினரின் கூட்டு முயற்சியால் சர்வதேச தரத்தில் மைதானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் உள்ள காட்டு வேப்பிலைப் பட்டி பகுதியில் சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் சார்பில் எஸ்.சி.எஃப் கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய கிரிக்கெட் மைதானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர் சீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ரூபா குருநாத், தேசிய கிரிக்கெட் அகாடமி இயக்குனர் ராகுல் டிராவிட், தமிழ்நாடு கூட்டுறவு வங்கி சேர்மன் இளங்கோவன், ஏற்காடு எம்எல்ஏ சித்ரா, வாழப்பாடி ஒன்றியக்குழு தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை உரையாற்றுகின்றனர்.
மேலும் சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர், உறுப்பினர்கள் மற்றும் சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் இயக்குனர்கள் கலந்துகொள்கின்றனர். விரைவில் இங்கு டிஎன்பிஎல், ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறும் என எதிர்பார்கப்படுகிறது.
இதையும் படிங்க: சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் 165 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு!