ETV Bharat / state

மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடலைப் பெற கேரளா செல்லும் அவரது தங்கை!

சேலம்: கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த மணிவாசகத்தின் சடலத்தை பெற்று வர அவரது தங்கை சேலத்திலிருந்து கேரளாவுக்குச் சென்றுள்ளார்.

மாவோயிஸ்ட் மணிவாசகம்
author img

By

Published : Oct 31, 2019, 1:18 PM IST

கேரள காட்டுப்பகுதியில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவரின் பெயர் மணிவாசகம்(57), இவர் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகிலுள்ள ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர்.

துப்பாக்கி சுடுவதில் வல்லவரான மணிவாசகம் காட்டுப்பகுதியில் சிலருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து வந்ததாகவும் அப்போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இவரது மனைவி கலாவும் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர். அவர் தற்போது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மணிவாசகம் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து ராமமூர்த்தி நகரில் வசிக்கும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மணிவாசகத்தின் தங்கை லட்சுமி மணிவாசகத்தின் சடலத்தை பெற்று வர நேற்று கேரளா சென்றுள்ளார் .

மாவோயிஸ்ட் மணிவாசகம்
மாவோயிஸ்ட் மணிவாசகம்

மணிவாசகத்தின் சடலம் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே எடுத்து வர உள்ளதால் அங்கு கூடுதல் காவல் துரையினரை குவித்து கண்காணிக்க காவல்துறை துணைத் தலைவர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட மணிவாசகம் குறித்து தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுட்டுக்கொல்லப்பட்ட மணிவாசகம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில், இளைஞர்களுக்கு கடந்த 2002ஆம் ஆண்டு ஆயுதப் பயிற்சி அளித்துள்ளார். இதையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணிவாசகம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளி வந்த அவர், தலைமறைவாகிவிட்டார். இதன்பிறகு 2012ஆம் ஆண்டு தமிழ்நாடு கியூ பிரிவு காவல் துறையினர் மணிவாசகத்தை கைது செய்து மீண்டும் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

அதன் பிறகும் ஜாமினில் வெளிவந்த அவர், தலைமறைவாகிவிட்டார். இவரைப் பிடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர் மீது சேலம் டவுன் காவல் நிலையம், மதிகோன் பாளையம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

பொதுமக்களைத் திரட்டி அரசுக்கு எதிராக போராட்டம் செய்யத் தூண்டுவது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளது. தற்போது மணிவாசகம் மாவோயிஸ்ட் இயக்கத்தின் தமிழ்நாடு மாநில குழு உறுப்பினராக உள்ளார். தமிழ்நாடு காவல் துறையினர் இவரைத் தேடி வந்த நிலையில்தான் கேரள காவல் துறையினர் இவரை தற்போது சுட்டுக் கொன்றனர்.

இதையும் படிங்க: மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டதின் எதிரொலி சோதனைச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு!

Intro:சேலம் மாவோயிஸ்ட் மணிவாசகம் பரபரப்பு தகவல்கள் .
கேரளாவில் சுட்டுக் கொல்லப்பட்டவரின் சடலத்தை பெற்றுவர தங்கை பயணம்.
Body:
கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்த பரமசிவத்தின் சடலத்தை பெற்று வர அவரது தங்கை சேலத்திலிருந்து சென்றுள்ளார்.

கேரளா காட்டுப்பகுதியில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தநான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர்களில் ஒருவரின் பெயர் மணிவாசகம்,இவர் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகிலுள்ள ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர்.
இவருக்கு தற்போது வயது 57 ஆகிறது.
துப்பாக்கி சுடுவதில் வல்லவரான மணிவாசகம் காட்டுப்பகுதியில் சிலருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து வந்ததாகவும் ,
அப்போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவரது மனைவி கலா. இவரும் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர் தற்போது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மணிவாசகம் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து ராமமூர்த்தி நகரில் வசிக்கும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து
மணி வாசகத்தின் தங்கை லட்சுமி மணிவாசகரின்சடலத்தை வாங்க நேற்று (புதன்) கேரளா சென்றுள்ளார் .

சடலத்தை பெற்று அவர் ராமமூர்த்தி நகர் வந்து இறுதி சடங்கு செய்ய முடிவு செய்துள்ளார்

மணிவாசகம் குறித்து கியூ பிரிவு போலீசார் முழு விசாரணை செய்து வருகிறார்கள்.

மணிவாசகத்தின் சடலம் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே எடுத்து வர உள்ளதால் அங்கு கூடுதல் போலீசார் குவித்து கண்காணிக்க சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் பிரதீப்குமார் உத்தரவிட்டிருக்கிறார்.

இந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட மணிவாசகம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்திருக்கிறது.
சுட்டுக்கொல்லப்பட்ட மணிவாசகம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வாலிபர்களுக்கு கடந்த 2002ஆம் ஆண்டு ஆயுதப் பயிற்சி அளித்தார்.

இதையடுத்து அவரை தேடிவந்த போலீசார் பின்னர் மணிவாசத்தை கைது செய்தனர் .

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணிவாசகம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் ஜாமீனில் வந்தவர் தலைமறைவாகிவிட்டார்.
இதன்பிறகு 2012ம் ஆண்டு தமிழக கியூ பிரிவு போலீசார் மணிவாசகத்தை கைது செய்து மீண்டும் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இதன் பிறகு ஜாமீனில் வெளிவந்தவர் மீண்டும் தலைமறைவாகிவிட்டார்.
இவரை பிடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .

இவர் மீது சேலம் டவுன் காவல் நிலையம் மற்றும் பள்ளப்பட்டி மற்றும் தருமபுரி மாவட்டம்
மதிகோன் பாளையம் மற்றும் கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது.

பொதுமக்களை திரட்டி அரசுக்கு எதிராக போராட்டம் செய்யத் தூண்டுவது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளது.
தற்போது மணிவாசகம் மாவோயிஸ்ட் இயக்கத்தின் தமிழக மாநில குழு உறுப்பினராக உள்ளார்.

தமிழக போலீசார் இவரை தேடி வந்த நிலையில்தான் கேரள போலீசார் சுட்டு கொன்றுள்ளனர் .
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.