ETV Bharat / state

இலங்கை தமிழர்களின் முன்னேற்றத்திற்கு திமுக துணை நிற்கும் - அமைச்சர் கே.என்.நேரு - இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

இலங்கை தமிழர்களின் முன்னேற்றத்தில் எப்போதும் திமுக துணை நிற்கும் என்று, சேலம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

இலங்கை தமிழர்
இலங்கை தமிழர்
author img

By

Published : Nov 17, 2021, 10:06 PM IST

சேலம்: நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சேலம் நாகியம்பட்டி உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 35 பேருக்கு நலத்திட்ட உதவிகளை இன்று (நவ.17) வழங்கினார். இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், சேலம் மக்களவை உறுப்பின பார்த்திபன், கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் பொன்.கௌதம் சிகாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தநிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "முதலமைச்சர் ஸ்டாலின் இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு பொருளாதார முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். மேலும், சேலம் மாவட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு 400 வீடுகள் கட்டித் தரப்பட உள்ளது. இலங்கைத் தமிழர்களின் (Sri Lankan Tamils) முன்னேற்றத்தில் எப்போதும் திமுக துணை நிற்கும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, பள்ளி மாற்றுச்சான்றிதழ் பெற முடியாமல், தனது படிப்பைத் தொடர முடியாமல் இருந்த 11 ஆம் வகுப்பு மாணவர் டேவிட் என்பவருக்கு மாற்றுச்சான்றிதழ் பெற்றுத் தந்து அதனையும் அமைச்சர் நிகழ்ச்சியில் வழங்கினார்.

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்குச் சமையல் எரிவாயு இணைப்புகள், சமையல் பாத்திரங்கள், ஆடைகள், சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்ட அடையாள அட்டை மற்றும் கூட்டுறவுத் துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.7.10 லட்சம் மதிப்பிலான பயிர் கடன் என மொத்தம் 35 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: சொல்லாமல் சென்றதற்கு மன்னியுங்கள் - தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உருக்கமான கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.