ETV Bharat / state

கூலமேடு ஜல்லிக்கட்டு - மாவட்ட ஆட்சியர் ஆய்வு - jallikattu

சேலம்: கூலமேட்டில் ஜல்லிக்கட்டு நடக்கவிருக்கும் சூழலில் அங்கு சேலம் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

maavattam
maavatam
author img

By

Published : Jan 17, 2020, 7:08 PM IST

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் கூலமேட்டில் நாளை நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . இந்த ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தி.எஸ். தீபா காணிகர் கலந்துகொண்டார்.

இந்த ஆய்விற்கு பின் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "ஆத்தூர் வட்டம் கூலமேட்டில் நாளைய தினம் சேலம் மாவட்டத்தின் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து காவல் துறை, வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மருத்துவத் துறை, ஜல்லிக்கட்டு கண்காணிப்புக் குழுவினர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினரும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடுப்பு வேலிகள், பாதுகாப்பு அம்சங்கள், மக்கள் அமரும் பார்வையாளர் மாடம், மேடைகள், ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்து வருவதற்குரிய பாதைகளுக்கான தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை பொதுப்பணித் துறையினரும் ஆய்வுசெய்து தகுதிச்சான்று, அமரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை நிர்ணயித்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறையினர் மாடுபிடி வீரர்களின் உடற்கூறு தகுதியை சான்றிதழ் செய்வதோடு, போதுமான மருத்துவர்கள், மருந்துகள், 108 ஆம்புலன்ஸ் வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்திடவும், உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த தேர்வுசெய்யப்பட்ட இடத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர் ஆகியோர் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான அறிக்கை அனுப்பவும் ஜல்லிக்கட்டு நடத்துவதைக் கண்காணிக்க வருவாய்த் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை, இதர சம்பந்தப்பட்ட துறைகளைக் கொண்ட அமைப்பினை கோட்ட அளவில் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரால் உருவாக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவர்களால் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு உடற்கூறு தகுதி என சான்றளிக்கவும், மத்திய பிராணிகள் நல வாரியத்தால் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிககப்பட வேண்டுமெனவும், அக்காளைகள் ஊக்குவிப்பு மருந்துகளோ, போதை வஸ்துகளோ உட்கொண்டுள்ளதா என்பதை சோதித்து பார்க்கவும், காளைகள் போட்டியின்போது காயமுற்றால் அவைகளுக்கு போதுமான சிகிச்சை அளிக்க விளையாட்டுத் திடல் அருகில் போதுமான மருந்துகளுடன் கால்நடை மருத்துவர்களுடன் மருத்துவ முகாம் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காளைகளின் கொம்புகள் கூர்மையாக சீவப்பட்டிருக்கும்பட்சத்தில் கூர் பகுதிகளுக்கு மரக்கவசம் அமைத்திருக்க வேண்டும். இல்லையெனில் கால்நடை மருத்துவர் மூலம் கூர்மழுங்கச் செய்யவும், காளைகள் விளையாட்டில் பங்கேற்கும் முன் ஓய்வாக இருக்க கட்டுத்தறை, தண்ணீர் வசதி செய்து காளைகளின் திடக்கழிவு, சிறுநீர் கழிவுகளை அகற்ற போதுமான ஏற்பாடுகள் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காளைகளில் மிளகாய் பொடி தடவுதல், சகதி தடவுதல், மூக்குப்பொடி தடவுதல் போன்ற தகாத செயல்களால் அவைகளை வெறியூட்டச் செய்யாதிருத்தலை உறுதி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் வாடிவாசலுக்கு வருவதற்கு முன்னர் 20 நிமிடங்களுக்கு மேல் ஓய்வு எடுக்கவும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் கால்நடை பராமரிப்புத் துறையினர் ஆய்வு செய்வதற்கு இடவசதி ஏற்படுத்தப்படுவதுடன் மாடுபிடி தளம் 50 சதுர மீட்டர் பரப்பளவில் இடவசதியுடன் 100 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட வேண்டும்.

மாடு அடையும் பகுதி மாடு ஒன்றிற்கு 60 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட வேண்டும். மேற்கண்ட பகுதியில் மாடுகளுக்குத் தேவையான தண்ணீர், தீவனம், நிழலுக்காக துணிப்பந்தல் அல்லது கூரையால் வேயப்பட்ட பந்தல் போன்ற வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் பாதுகாப்பு குறித்து கால்நடை பராமரிப்புத் துறை, காவல் துறையினரால் உறுதி செய்திடவும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் முழுவதுமாக கால்நடை பராமரிப்புத் துறையினரால் முழு பரிசோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும். காளைகளுக்கு உடலில் எந்த இடத்திலும் காயங்கள் இருக்கக் கூடாது. அவ்வாறு இருப்பின் விதிமுறைகளின்படி அந்தக் காளைகளை திருப்பி அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் அமரும் இடம் வலுவான கட்டைகளைக் கொண்டு உறுதியாக அமைத்து பொதுப்பணித் துறையினரிடம் அதற்கான சான்றினை பெற்றிருக்கவும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் தாவி குதித்து வரா வண்ணம் குறைந்தபட்சம் 8 அடி உயரம் தடுப்புக்கட்டை அமைக்கவும், ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக ஜல்லிக்கட்டு குழுவினர் மேற்கண்ட நெறிமுறைகளையும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். தீபா காணிகர், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் எம். துரை, மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை மரு. புருஷோத்தமன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு. நிர்மல்சன், ஆத்தூர் வருவாய் வட்டாட்சியர் பிரகாஷ், கூலமேடு ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஏ. கந்தசாமி, ஜல்லிக்கட்டு கண்காணிப்புக் குழுவினர், தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

Intro:                                                               
ஜல்லிக்கட்டு நடத்தும் விழா குழுவினர் உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடித்து ஜல்லிக்கட்டு நடத்திட வேண்டுமென ஆட்சியர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.Body:                                                      

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், கூலமேட்டில் நாளை 18.01.2020 நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . இந்த ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஎஸ்.தீபா காணிகர், கலந்து கொண்டார். இந்த ஆய்விற்குப்பின் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "
         சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், கூலமேட்டில் நாளைய தினம் 18.01.2020, சனிக்கிழமை அன்று சேலம் மாவட்டத்தின் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து காவல்துறை, வருவாய் துறை, பொது பணித்துறை, கால்நடைபராமரிப்புத்துறை, மருத்துவத்துறை, ஜல்லிக்கட்டு கண்காணிப்புக் குழுவினர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினரும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடுப்பு வேலிகள், பாதுகாப்பு அம்சங்கள், மக்கள் அமரும் பார்வையாளர் மாடம், மேடைகள், ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்து வருவதற்குரிய பாதைகளுக்கான தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை பொதுப்பணித்துறையினரும் ஆய்வு செய்து தகுதி சான்று மற்றும் அமரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை நிர்ணயித்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரத்துறையினர் மாடுபிடி வீரர்களின் உடற்கூறு தகுதியை சான்றிதழ் செய்வதோடு, போதுமான மருத்துவர்கள் மற்றும் மருந்துகள், 108 ஆம்புலன்ஸ் வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்திடவும், உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
         ஜல்லிக்கட்டு நடத்த தேர்வு செய்யப்பட்ட இடத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சம்மந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான அறிக்கை அனுப்பவும், ஜல்லிக்கட்டு நடத்துவதை கண்காணிக்க வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் இதர சம்பந்தப்பட்ட துறைகளை கொண்ட அமைப்பினை கோட்ட அளவில் சம்மந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரால் உருவாக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
         கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்களால் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு உடற்கூறு தகுதி என சான்றளிக்கவும், மத்திய பிராணிகள் நல வாரியத்தால் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிககப்பட வேண்டுமெனவும், அக்காளைகள் ஊக்குவிப்பு மருந்துகளோ, போதை வஸ்துகளோ உட்கொண்டுள்ளதா என்பதை சோதித்து பார்க்கவும், காளைகள் போட்டியின் போது காயமுற்றால் அவைகளுக்கு போதுமான சிகிச்சை அளிக்க விளையாட்டுத் திடல் அருகில் போதுமான மருந்துகளுடன் கால்நடை மருத்துவர்களுடன் மருத்துவ முகாம் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
         காளைகளின் கொம்புகள் கூர்மையாக சீவப்பட்டிருக்கும் பட்சத்தில் கூர் பகுதிகளை மரக்கவசம் அமைத்திருக்க வேண்டும். இல்லையெனில் கால்நடை மருத்துவர் மூலம் கூர்மழுங்கச் செய்யவும், காளைகள் விளையாட்டில் பங்கேற்குமுன் ஓய்வாக இருக்க கட்டுத்தறை, தண்ணீர் வசதி செய்து காளைகளின் திடக்கழிவு மற்றும் சிறுநீர் கழிவுகளை அகற்ற போதுமான ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
         காளைகளில் மிளகாய்ப்பொடி தடவுதல், சகதி தடவுதல், மூக்குப்பொடி தடவுதல் போன்ற தகாத செயல்களால் அவைகளை வெறியூட்டச் செய்யாதிருத்தலை உறுதி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் வாடிவாசலுக்கு வருவதற்கு முன்னர் 20 நிமிடத்திற்கு மேல் ஓய்வு எடுக்கவும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் கால்நடை பராமரிப்புத்துறையினர் ஆய்வு செய்வதற்கு இடவசதி ஏற்படுத்தப்படுவதுடன் மாடுபிடி தளம் 50 சதுர மீட்டர் பரப்பளவில் இடவசதியுடன் 100 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட வேண்டும். மாடு அடையும் பகுதி மாடு ஒன்றிற்கு 60 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட வேண்டும். மேற்கண்ட பகுதியில் மாடுகளுக்குத் தேவையான தண்ணீர், தீவனம், மற்றும் நிழலுக்காக துணிப்பந்தல் அல்லது கூரையால் வேயப்பட்ட பந்தல் போன்ற வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.
         ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் பாதுகாப்பு குறித்து கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் காவல்துறையினரால் உறுதி செய்திடவும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் முழுவதுமாக கால்நடை பராமரிப்புத் துறையினரால் முழு பரிசோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும். காளைகளுக்கு உடலில் எந்த இடத்திலும் காயங்கள் இருக்கக் கூடாது. அவ்வாறு இருப்பின் விதிமுறைகளின்படி அந்த காளைகளை திருப்பி அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
         பார்வையாளர்கள் அமரும் இடம் வலுவான கட்டைகளை கொண்டு உறுதியாக அமைத்து பொதுப்பணித்துறையினரிடம் அதற்கான சான்றினை பெற்றிருக்கவும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் தாவி குதித்து வரா வண்ணம் குறைந்த பட்சம் 8 அடி உயரம் தடுப்பு கட்டை அமைக்கவும், ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக ஜல்லிக்கட்டு குழுவினர் மேற்கண்ட நெறிமுறைகளையும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். " என்று மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்தார்.

Conclusion:இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.தீபா காணிகர், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் எம்.துரை, மண்டல இணை இயக்குநர், கால்நடைபராமரிப்புத்துறை மரு.புருஷோத்தமன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.நிர்மல்சன், ஆத்தூர் வருவாய் வட்டாட்சியர் பிரகாஷ், கூலமேடு ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஏ.கந்தசாமி, ஜல்லிக்கட்டு கண்காணிப்புக் குழுவினர் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.