ETV Bharat / state

தமிழக அரசு ஆளுநருடன் அனுசரித்துச் செல்ல வேண்டும் - ஜார்க்கண்ட் ஆளுநர் அட்வைஸ் - sowrastra tamil sangam

சேலத்தில், தமிழக அரசு, ஆளுநர் ஆர்.என். ரவியுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் மக்கள் நலனை முன்னிறுத்தி ஆளுநருடன் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

தனியார் நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட சி பி ராதாகிருஷ்ணன்

author img

By

Published : Jul 6, 2023, 12:39 PM IST

Updated : Jul 6, 2023, 1:08 PM IST

தமிழக அரசு ஆளுநருடன் அனுசரித்துச் செல்ல வேண்டும் - ஜார்க்கண்ட் ஆளுநர் அட்வைஸ்

சேலம்: ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் சேலத்தில் நடைபெற்ற தனியார் நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், ''ஒரு உயர்ந்த நீதி எதுவென்றால் நம்முடைய வாழ்க்கை சட்டத்தை மட்டுமல்ல தர்மத்தை பொறுத்து அமைந்துள்ளது. நாம் பல்வேறு மொழிகளை பேசுபவர்களாக இருந்தாலும், கலாசாரம் பண்பாட்டை பொறுத்தவரை அனைவரும் ஒற்றுமையாக இருந்து வருகிறோம்.

அந்த வகையில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக காசி தமிழ்ச் சங்கமம், செளராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு சிறப்பாக நடத்தியுள்ளது. தமிழின் பெருமையை பாரத தேசம் முழுவதும் எடுத்துச் செல்வதற்கு இந்த நிகழ்ச்சிகள் பேருதவி புரிந்துள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும்பாலும் இந்தி மொழி பேசப்படுகிறது. உள்ளூர் மொழிகளும் உள்ளன. காசி தமிழ்ச் சங்கமம் மற்றும் செளராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியைப் போல, ஜார்க்கண்ட் மாநிலத்துடன் தமிழ்நாடு மாநிலமும் இணைந்து கலாசார நிகழ்ச்சி நடத்த எதிர்காலத்தில் திட்டமிடப்படும்.

தமிழகமும் ஜார்க்கண்ட் மாநிலமும் இணைந்து வளர்ச்சி பெற வேண்டும் என்பதில் என்னுடைய கவனம் இருக்கிறது. மருத்துவம், தொழில்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட பல துறைகளிலும் இரு மாநில ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்படும். அதற்கான செயல் வடிவங்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

மேலும் அவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்து பேசுகையில், ''தமிழ்நாடு அரசும் ஆளுநரும் இணைந்து செயல்பட வேண்டும். அரசின் அணுகுமுறையும் அனுசரணையும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். அப்படி இருக்கிறபோது ஆளுநரின் அணுகுமுறையும் அதை சார்ந்ததாக மாறும்.

இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்தாக இருக்க வேண்டும். மாநில அரசும் மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். அப்போது ஆளுநரின் அணுகுமுறையும் மக்கள் நலன் சார்ந்தே அமையும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுநர் அவர் கடமையைச் செய்கிறார். அதை வேறொரு கண்கொண்டு பார்ப்பதாக நான் உணர்கிறேன்.

எனக்கு தெரிந்தவரையில் தமிழக ஆளுநர் தமிழக மக்கள் நலனில் அதிக அக்கறைக் கொண்டவராக இருக்கிறார். தமிழக அரசு ஆளுநருடன் மோதல் போக்கை கடைபிடிக்காமல், ஆளுநரை அனுசரித்து அவருடைய முழு ஆதரவையும் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசின் நடவடிக்கை இருக்க வேண்டும். ஏனெனில் ஆளுநர் என்பவர் ஒரு கட்சியைச் சேர்ந்தவர் இல்லை'' என்றார்.

மேலும், பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர்கள் அரசியல் பேசக்கூடாது என்று கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்,''பத்திரிகையாளர்கள் விரும்பி கேட்கும்போது பதிலளிக்காமல் செல்ல முடியாது. அரசியல் பேசக்கூடாது என அண்ணாமலை கூறியதற்கு அவரிடம் தான் அது பற்றி நீங்கள் கேட்க வேண்டும்'' என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மேட்டூர் - வெளியேறும் சாம்பல்: சுவாசக் கோளாறால் தவிக்கும் மக்கள் - கண்டுகொள்ளுமா அரசு?

Last Updated : Jul 6, 2023, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.