ஊரடங்கு நேரத்தில் சேலம் அம்மாப்பேட்டையில் எலுமிச்சை விற்பனை செய்ததாக வேலுமணி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரை மீட்பதற்காக அவரின் தாய் பாலாமணி(70) காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அவர், தன் மகனை விடுவிக்கக் கோரியபோது, காவல் நிலையத்தில் இருக்கும் அனைத்து காவலர்களின் கால்களில் விழுந்து வணங்கும்படி காவல் ஆய்வாளர் சொன்னதாகக் கூறப்படுகிறது. அவரும் அப்படியே செய்துள்ளார். அதன் பின்னரும் அவருடைய மகனை விடுவிக்காத நிலையில், மயக்கமடைந்த பாலாமணி மரணமடைந்தார். காவல்துறையின் அலட்சியத்தால் தன் தாய் மரணமடைந்ததாக வேலுமணி பேசி வெளியிட்ட விடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது.
இது தொடர்பான செய்தியை அடிப்படையாக வைத்து, மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் துரை. ஜெயச்சந்திரன், உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் ஆகியோர், சேலம் மாநகரக் காவல் ஆணையர், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி 2 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க...சென்னையை ஆக்கிரமிக்கும் கரோனா: தலைநகரே மீண்டு வா!