ETV Bharat / state

சேலத்தில் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்கப்போட்டி தொடக்கம்

author img

By

Published : Jul 28, 2022, 9:03 PM IST

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம், இன்று சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி வைத்தார்.

சேலத்தில் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்க போட்டி தொடக்கம்

சேலம்: சர்வதேச அளவிலான 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று(ஜூலை28) முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் 180-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். சேலம் மாவட்டத்தில் அதனைப் பிரபலப்படுத்தும் வகையில், பல்வேறு விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்போட்டிகள் குறித்து சேலம் மாவட்டத்தில் பிரபலப்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே சதுரங்கப் போட்டிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் கோலங்கள் வரைதல், சைக்கிள் மற்றும் நடைப்பேரணிகள், காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் மிதவை செஸ் போட்டிகள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுக்கான செஸ் போட்டிகள், இருசக்கர வாகனப்பேரணிகள் உள்ளிட்ட விளம்பரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், பள்ளி வாகனங்கள், பேருந்துகள், ஷேர் ஆட்டோக்களில் ஒட்டு வில்லைகள், செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் சின்னம் அடங்கிய ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்தல், மாவட்ட ஆட்சியரகத்தில் செல்ஃபி பாயிண்ட் அமைத்தல் மற்றும் வண்ண பலூன்களை பறக்க விடுதல், ஏற்காடு மலைச்சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளின் தடுப்புச்சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து சுவர் ஓவியங்கள் வரைதல் போன்ற பல்வேறு விளம்பரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை விளம்பரப்படுத்தும் வகையில் 36 செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு இரு பிரிவுகளாக மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் தொடங்கி வைத்தார். இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ. மேனகா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.இரா.மகிழ்நன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:LIVE: பிரதமர் கலந்துகொள்ளும் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.