சேலம்: மேட்டூர் 4 ரோடு நிறுத்தத்தில் இன்று (ஆக.7) நின்ற தனியார் பேருந்து ஒன்றிலிருந்து 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர், வேகமாக அனல் மின் நிலைய சாலையில் சென்று, காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் மீது ஏறி திடீரென ஆற்றில் குதித்தார். இதனைக்கண்ட அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர்கள் காவிரி ஆற்றில் குதித்தவரைத்தேடி வருகின்றனர். தற்போது மேட்டூர் காவிரியில் உபரி நீர் திறப்பு விநாடிக்கு 1.20 லட்சம் கன அடியாக இருப்பதால் ஆற்றில் குறித்த நபரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.
மேலும் காவிரி ஆற்றில் குதித்த நபர் யார் எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது குறித்தும்; குடும்பத்தகராறு காரணமாக குதித்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது உள்ளிட்ட பல கோன்ணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் காவிரியில் குதித்த நபர் தண்ணீரில் தத்தளிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
![தற்கொலை எதற்கும் தீர்வல்ல..](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16041737_susu.jpg)
இதையும் படிங்க: செல்போன் சிக்னல், இணையதளம் என துளியும் தொலைத்தொடர்பு இல்லாத நடுக்காட்டில் உருவாகும் முதல் பட்டதாரி பெண்!