சேலத்தில் உள்ள தனியார் விடுதியில் 66வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் கருத்தரங்கம் ஆகியவை நடைபெற்றது. கருத்தரங்கில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி குறித்தும், மரவள்ளி கிழங்கு மூலம் தயாரிக்கப்படும் ஜவ்வரிசி ஏற்றுமதி குறித்தும் சேகோசர்வ் தலைவர் தமிழ்மணி எடுத்துரைத்தார். தொடர்ந்து விவசாயிகளின் கருத்துக்களை அவர் கேட்டறிந்தார்.
இதில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசுகையில், 'மரவள்ளிக்கிழங்கு விலையை குறைக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்துணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஜவ்வரிசி உணவை வாரம் ஒருமுறை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
மேலும், 'சென்ற கூட்டத்தில் கேட்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை' என அவர்கள் வேதனையோடு தெரிவித்தனர்.
கருத்தரங்கில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: காட்டுயானைகள் நிலங்களுக்குள் புகுவதைக் கண்டறிய விசாயிகளின் புது முயற்சி!