ETV Bharat / state

உதயநிதி அமைச்சரானால் தேனாறும் பாலாறுமா ஓடப்போகிறது? - விளாசிய ஈபிஎஸ் - உதயநிதி அமைச்சர்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறுமா ஓடப் போகிறது என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ஈபிஎஸ் விமர்சித்துள்ளார்.

உதயநிதி அமைச்சரானால் தேனாறும் பாலாறுமா ஓடப் போகிறது? - விளாசிய இபிஎஸ்

author img

By

Published : Dec 13, 2022, 6:10 PM IST

சேலம்: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சொத்து வரி, பால் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு வரிகளை உயர்த்திய திமுக அரசைக் கண்டித்து ஆத்தூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் பல மாவட்டங்கள் இருந்தாலும் சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை. அதிமுகவின் கோட்டையில் எவரெல்லாம் நுழையப் பார்க்கிறார்கள்?. மழையைப் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ள இந்த மக்கள் கூட்டம் இருக்கும் வரை எவராலும் அதிமுகவை அசைக்க முடியாது. மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதற்காக எடுத்த சபதம்தான் இந்த ஆர்ப்பாட்டம்.

முடிசூட்டு விழா: மக்களின் ஒட்டுமொத்த குரலாக இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கு, நாளை முடிசூட்டு விழா நடைபெறுகிறது. நாட்டுக்கு நல்லதை செய்த ஒருவருக்கு முடிசூட்டு விழா. உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் தமிழ்நாட்டில் தேனாறும், பாலாரும் ஓடப் போகிறதா?

தமிழ்நாட்டில் ஏற்கெனவே அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருகிறது. இவர் வந்தால் ஊழல்களுக்குத் தலைவராக இருந்து செயல்படுவார். குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். தமிழ்நாட்டில் நான்கு முதலமைச்சர்கள் உள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அவரது மனைவி, மருமகன், மகன்.

ஒரு முதலமைச்சர் இருந்தாலே தமிழ்நாடு தாக்குப் பிடிக்க முடியாது. நான்கு பேர் இருந்தால் தாக்குப் பிடிக்க முடியுமா? குடும்ப ஆட்சிக்கும் வாரிசு அரசியலுக்கும் முடிவு கட்டுவோம். திமுக கட்சியில்லை; அது கார்ப்பரேட் கம்பெனி. திமுக ஆட்சிக்கு வந்து 19 மாதங்கள் முடிந்து விட்டன. மூன்றில் ஒரு பங்கு ஆட்சிக் காலம் முடிந்து விட்டது.

ஆனால், நாட்டு மக்களுக்கு என்ன திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார்? குடும்பம் செழிக்கவும், தனது மகன் அமைச்சராக வேண்டும் என்பதும்தான் அவர் எண்ணம். நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சருக்கு இல்லை. மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.

காற்றில் பறந்த வாக்குமூலம்: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் அப்படியே அந்தர் பல்டி அடித்துவிட்டனர். இதுதான் திமுகவின் தேர்தல் அறிக்கை. எல்லோருக்கும் கொடுக்கமாட்டோம், தகுதியானவர்களுக்கு மட்டுமே தருவோம் என்று கூறியுள்ளார்கள்.

இப்படித்தான் தேர்தல் அறிக்கையில் அறிவித்தீர்களா? வீதியில் நின்று போராட்டம் நடத்தி வருகிறோம். நம்மை வீதிக்கு கொண்டு வந்தவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட திட்டங்களை திமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கிறார்கள்.

கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வெற்றிபெற்று ஏமாற்றி விட்டார். தமிழ்நாட்டில் லஞ்சம் இல்லாத துறையே கிடையாது. இதுதான் திராவிட மாடல். வீட்டு மக்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிற ஒரே முதலமைச்சர், திமுக தலைவர் ஸ்டாலின். இதற்கு முன்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தனது குடும்பத்தில் உள்ள நபர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்றும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் பத்திரிகை ஒன்றில் அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தற்போது அதனை காற்றில் பறக்க விட்டுவிட்டனர். பல்வேறு துறைகள் மூலம் ஊழல் செய்து சம்பாதிக்கும் பணத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலமாக வெளியிடுகிறார்கள். உதயநிதி ஸ்டாலின் நிறுவனத்துக்கு திரைப்படத்தைக் கொடுக்காவிட்டால், அந்தப் படத்தை வெளியிட விடுவதில்லை.

சேலம் ஆத்தூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

அதிமுக பிரியவில்லை: ஊழல், கறுப்புப் பணத்தை எல்லாம், வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கு அவரது நிறுவனம் மூலமாக திரைப்படத்தை வாங்கி வெளியிட்டு வருகிறார்கள். அதிமுகவில் உள்ளவர்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றாகத்தான் உள்ளனர். அதிமுகவை எவராலும் தொட்டுப் பார்க்க முடியாது.

அதிமுகவை அழித்து விடலாம் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்துவிடாதீர்கள். வாழையடி வாழையாக வளர்ந்து கொண்டே இருக்கும். அதிமுக இயக்கத்தை ஒற்றுமையாக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நடத்திக்கொண்டுள்ளோம். அதிமுகவின் பலத்தை ஒருபோதும் குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள்.

அதிமுகவின் தொண்டன் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். உழைப்பால் வளர்ந்த கட்சி, எப்பொழுதும் அதிமுக கட்சிதான். அதிமுக தமிழ்நாடு முழுவதும் பிரிந்து கிடைக்கிறது என்று கூறுகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் அனைவராலும் ஒன்றிணைந்து நடைபெற்று வருகிறது.

துரோகம் செய்ய வேண்டாம்: மக்களைக் காக்க கூடிய கட்சி, அதிமுக கட்சிதான். அதிமுக உயிரோட்டம் உள்ள கட்சி. எவராலும் அசைக்க முடியாது. பொய் வழக்குப்போட்டு அதிமுகவை முடக்கி விடலாம் என்று நினைத்து விடாதீர்கள். எத்தனை வழக்குகள் வந்தாலும் அதை சட்ட விதிகளின்படி எதிர்கொள்வோம்.

அதிமுகவில் தொண்டன்தான் கட்சியை வழி நடத்த முடியும். பொறுப்புக்கு வர முடியும். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எங்கு பார்த்தாலும் கொள்ளை, கொலை மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. மோசமான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் சூப்பர் முதலமைச்சராம்.

வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு தகுந்த சவுக்கடி கொடுக்க வேண்டும். அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும். வீட்டு மக்களை விட்டுவிட்டு, நாட்டு மக்களைப் பாருங்கள். நம்பி வாக்களித்த மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் துரோகம் செய்ய வேண்டாம்.

அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பேச நான் தயார். அதேபோல் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விவாதிக்க வாருங்கள் என்றால் வரவில்லை. திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டிருந்தால் மட்டுமே வர முடியும். அதிமுக மீண்டும் அமையும்.

அரசு அலுவலர்கள் அடிமையாக இருக்க வேண்டாம்: தமிழ்நாட்டில் நடக்காததை நடந்ததுபோல் சித்தரிக்கும் முதலமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தான். ஐஏஎஸ் அலுவலர் ஒருவர் முதலமைச்சரின் காரின் வெளியே தொங்கிக்கொண்டு செல்கிறார். அதைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது. அரசு அலுவலர்கள் தங்களது உரிமைகளை சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

திமுக ஆட்சிக்கு அடிமைத்தனமாக இருக்க வேண்டாம். மின்சாரத்தை தொட்டால்தான் ஷாக் அடிக்கும். ஆனால், தற்போது மின்சார கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. இதற்கு தமிழ்நாடு மக்கள் தகுந்த பதிலடியை வருகிற தேர்தலில் கொடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் ஒரே ஒரு குரல் ஒலித்துக் கொண்டுள்ளது.

அந்தக் குரல் திமுக ஆட்சி எப்பொழுது போகும் என்பதுதான்” என்றார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆத்தூர், கெங்கவல்லி மற்றும் ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 10 சதவீதம் வாரிசு அரசியல் சகஜம் தான் - அமைச்சர் பொன்முடி பளீச்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.