மின்கட்டணம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக சர்ச்சைக்குரிய கருத்துக்கள் எழுந்துள்ள நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது,
“கரோனா காரணமாக நடப்பு மாதம் மின் கணக்கீடு செய்யமுடியாத சூழ்நிலை உள்ளதால் தான் கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாத மின் கணக்கீடு தொகையை கட்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. கடந்தாண்டு மின் கணக்கீட்டில் இருந்த குளறுபடிகள் தற்போது இல்லை.
பாமக, மநீம உள்ளிட்ட கட்சி தலைவர்கள் மட்டுமே டெபாசிட்டில் குளறுபடி என அறிக்கை விடுகிறார்களே தவிர பயனீட்டாளர்கள் யாரும் இதுவரை எவ்வித புகாரும் அளிக்கவில்லை. உரிய ஆதாரத்தோடு புகார் சொன்னால் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பயன்படுத்தாத மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் கட்ட நேர்ந்தால் அடுத்த கணக்கீட்டின்போது அந்த தொகை கழிக்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறை விரைவில் நிறைவேற்றப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் ஆய்வு: காத்திருந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உத்தரவு!