ETV Bharat / state

ஏரி சீரமைப்பு பணிக்கு முட்டுக்கட்டையிடும் திமுக பிரமுகர்கள்! - salem district news

சேலம்: சேலத்தாம்பட்டி ஏரியை சீரமைத்து பூங்கா மற்றும் பறவைகள் சரணாலயம் அமைக்கும் பசுமைத் தாயகம் அமைப்பின் பணிக்கு திமுக பிரமுகர்கள் முட்டுக்கட்டைப் போடுவதாக புகார் எழுந்துள்ளது.

சேலம் மாவட்டச் செய்திகள்  பசுமைத் தாயகம் அமைப்பு  சேலத்தாம்பட்டி ஏரி சீரமைப்புப் பணி  salem district news  salethampatty lake area
ஏரி சீரமைப்பு பணிக்கு முட்டுகட்டைப் போடும் திமுகப் பிரமுகர்கள்
author img

By

Published : Aug 11, 2020, 8:32 PM IST

சேலம் மாவட்டம் சிவதாபுரம் அருகே சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் சேலத்தாம்பட்டி ஏரி, சுற்றுவட்டாரத்தில் உள்ள பத்து கிராமங்களுக்கு நிலத்தடி நீர் மட்டத்திற்கு ஆதாரமாக விளங்கி வருகிறது. இப்பகுதி சேலம் மாநகரை ஒட்டியுள்ள பகுதி என்பதால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக போதுமான பராமரிப்பு இன்றி ஏரி முழுவதும் முட்புதர்கள் மண்டியுள்ளன.

இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சேலம் மாநகரில் பெய்யும் அதிகப்படியான மழைநீரால் ஏரி நிரம்பி வழிவதும், ஏரி அருகேயுள்ள மின் நிலையம் வெள்ளக்காடாவதும் வாடிக்கையாக உள்ளது. ஏரி நீர் வழிந்தோடுவதால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும், ஏரி நீர் மாசுபடுவதைத் தடுத்து 10 கிராமங்களின் விவசாயத்தைப் பாதுகாக்கவும் பசுமை தாயகம் அமைப்பின் சார்பில், மாவட்ட நிர்வாகத்தின் முழுமையான ஒப்புதலுடன் சிவதாபுரம் பகுதியிலுள்ள ஆண்டிப்பட்டி ஏரி, சேலத்தாம்பட்டி ஏரி சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சில நாட்களாக சேலம் பகுதிகளில் பெய்த கனமழையால் சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி தற்போது கடல்போல் காட்சியளிக்கிறது.

பசுமைத் தாயகம் அமைப்பின் மாநில துணைச் செயலாளர் பேட்டி

இது குறித்து பேசிய பசுமைத் தாயகம் அமைப்பின் மாநில துணை செயலாளர் ஆனந்தராஜ், "ஏரியை முற்றிலுமாக தூர்வாரி அதனை ஆழப்படுத்தி அதிகப்படியான நீரைத் தேக்கி, சுற்றுலாத் தளமாக இதனை மாற்றவேண்டும் என்று உயர்ந்த லட்சியத்தோடு செயல்பட்டு வருகிறோம். எங்களுடன் சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் சங்கத்தினரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஏரியைத் தூர்வாரும் பணிக்கு திமுக பிரமுகர்கள் முட்டுக்கட்டை போட்டு பணம் கேட்டு மிரட்டல் விடுத்துவருகின்றனர். இது எங்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. ஏரியில் 30 ஏக்கரை கருவேலச் செடி ஆக்கிரமிப்புகளை நீக்கி பூங்கா, பறவைகள் சரணாலயம் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு தடையாகவுள்ள திமுக பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க சேலம் ஆட்சியரிடம் வலியுறுத்தவுள்ளோம்" என்றார்.

சேலத்தாம்பட்டியில் ஏற்கனவே தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. நீர் ஆதாரமாக திகழும் ஏரியை ஆக்கிரமித்து அரசு குடியிருப்புகளைக் கட்டுவதால் மீதமுள்ள ஏரியையாவது காப்பாற்றலாம் என்ற நல்லநோக்கத்தோடு செயல்படும் பசுமைத் தாயகம், வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலை முடக்க நினைக்கும் திமுக பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: ஏரியை சொந்த செலவில் செப்பனிட முயன்ற மக்கள் - தடுத்து நிறுத்திய அரசு அலுவலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.