சேலம்: இது தொடர்பாக சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில்," கரோனா தொற்று பாதித்தவர்கள், தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள், சர்க்கரை நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் என்று பல தரப்பினரும் கறுப்பு பூஞ்சை தொற்றுக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர்.
இன்றைய நிலவரப்படி சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் கறுப்பு பூஞ்சை பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 276 ஆக உள்ளது.
குணமடைவோரைக் காட்டிலும், பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோய் அறிகுறிகள் தெரிந்தவுடன் நோயாளிகள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு: அரசின் தகவல் பெரும்பாலான ஆய்வகங்களுக்கு கிடைக்கவில்லை