ETV Bharat / state

"செந்தில் பாலாஜி, பொன்முடி வரிசையில் 13 அமைச்சர்கள்" - கே.பி.ராமலிங்கம் விடுத்த வார்னிங்!

திமுக ஆட்சியை அகற்றுவதற்கு ஆரம்ப கட்டப் போராட்டமாக வரும் ஜூலை 23ல் தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்த உள்ளது என தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.

"செந்தில் பாலாஜி, பொன்முடி வரிசையில் 13 அமைச்சர்கள்" - கே.பி.ராமலிங்கம் விடுத்த வார்னிங்!
"செந்தில் பாலாஜி, பொன்முடி வரிசையில் 13 அமைச்சர்கள்" - கே.பி.ராமலிங்கம் விடுத்த வார்னிங்!
author img

By

Published : Jul 18, 2023, 5:32 PM IST

"செந்தில் பாலாஜி, பொன்முடி வரிசையில் 13 அமைச்சர்கள்" - கே.பி.ராமலிங்கம் விடுத்த வார்னிங்!

சேலம்: பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் இன்று (ஜூலை 18) தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பெங்களூரு எதிர்க்கட்சி கூட்டத்திற்குச் சென்றதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கருப்புச் சட்டை அணிந்து பாஜக நிர்வாகிகளுடன் வந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ''காவிரி டெல்டா பாசனத்திற்கு, அங்கு உள்ள மூன்றேகால் லட்சம் ஏக்கருக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73 அடி. அதில், 46 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. குறுவை சாகுபடி முழுமையாக விளைச்சலுக்கு வந்து சேருகின்ற வரை, டெல்டா பாசனத்திற்கு 331 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். ஆனால் நம்மிடம் இருப்பது 41 டிஎம்சி மட்டுமே.

இப்போது 10 ஆயிரம் கன அடி பாசனத்திற்கு விடுவிக்கப்படுகிறது. மேலும், பாசனத்திற்கு இன்னும் 25 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து விடுவிக்க முடியும். குடிநீர் தேவை இன்னும் நூறு நாட்களுக்கு மட்டுமே பூர்த்தியாகும். எந்த அளவிற்கு அவசரச்சூழ்நிலை என்பது தமிழக முதலமைச்சர் உணரவில்லை.

கே.ஆர்.எஸ் அணையில் 89.5 அடி தண்ணீர் அளவும், 398 டிஎம்சி தண்ணீர் இருப்பும் உள்ளது. 148 அடி மட்டுமே மேட்டூருக்கு தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் வாழ்வாதாரம் என்னவாகும் என்பதைப் பற்றி கவலைப்படாமல், இன்றைக்கு காங்கிரஸ் கட்சி தலைமையிலான, எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டுள்ளார்.

ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்குத் தர மாட்டோம் என்றும், மேகதாதுவில் அணை கட்டுவோம் என்றும் கர்நாடக அரசு கூறி வருகிறது. அதைப்பற்றி கவலைப்படாமல் காவிரி நீர் குறித்து பேச அவர் செல்லவில்லை. எதிர்க்கட்சிகள் கூட்டும் கூட்டத்திற்கு விருந்திற்காக ஸ்டாலின் செல்கிறார்'' என்றார்.

இதையும் படிங்க: Minister Ponmudi: அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-ஆம் நாள் விசாரணை!

முதலமைச்சர் பதவி விலக வேண்டும்: ''இதனைக் கண்டித்து திமுக ஆட்சியை அகற்றுவதற்கு ஆரம்ப கட்ட போராட்டமாக, வரும் ஜூலை 23ல் தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்த உள்ளது. தமிழக முதலமைச்சர் நியாயமாக பதவி விலக வேண்டும், சட்டத்துக்கு எதிராக செயல்பட மாட்டோம் என்று ஆட்சி பொறுப்பேற்ற தமிழக முதலமைச்சர், குற்றவாளியான செந்தில் பாலாஜியை பாதுகாக்கலாமா? அவருக்கு ஆதரவாக செயல்படலாமா?'' எனக் கேள்வி எழுப்பினார்.

எல்லாவற்றிற்கும் ஸ்டிக்கர் ஒட்டுவது போன்று, ஆபரேஷனுக்கும் ஒரு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு விசாரணைக்கு ஒத்துழைக்காமல், இருந்த செந்தில்பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை சரியில்லாததால் இலாகா மாற்றுவதாக கூறிவிட்டு அவரை அமைச்சராகத் தொடர வைத்துள்ளார், முதலமைச்சர்.

செந்தில் பாலாஜிக்கு உடந்தையாக முதலமைச்சர்: சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் உடனடியாக அவரை விடுவித்திருக்க வேண்டும். குற்றவாளி விசாரணைக் கைதி சிறையில் அடைக்கப்பட்ட பிறகும், அமைச்சராக வைத்திருக்கிறார் என்றால் இந்த குற்றத்திற்கு முதலமைச்சர் துணை போகிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

குற்றவாளியைப் பாதுகாக்கின்ற முதலமைச்சர், குற்றத்தின் பின்னணியில் தமிழக முதலமைச்சரும் இருக்கிறாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு வேறாக இருக்கலாம், விசாரிக்கப்பட்ட போது வேறு பல வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன.

செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடந்தபோது தமிழக முதலமைச்சர் எவ்வாறு துடித்தார்கள். ஆனால் பொன்முடி வீட்டில் சோதனை நடக்கும் போது அவ்வாறு துடிக்கவில்லை. செந்தில் பாலாஜி வழக்குகளில் ஆணி வேர் முதலமைச்சர் வீட்டில் சென்று நிற்கிறது.

திமுக-வின் அடுத்த விக்கெட்: முதல் விக்கெட் செந்தில்பாலாஜி, அடுத்த விக்கெட் பொன்முடி. தொடர்ந்து 13 விக்கெட்கள் விழப்போகிறது.15 அமைச்சர்கள் வெவ்வேறு வழக்குகளில் ஜெயிலில் இருக்கப் போகிறார்கள். ஜெயில் மந்திரிசபை நடத்தப் போகிறீர்களா? இந்த வழக்கிலிருந்து செந்தில் பாலாஜி தப்பிக்க முடியாது.

கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி புறப்பட்டு ஜூலை 10ஆம் தேதி வரை அன்பில் மகேஷ் பொய்யாமொழி எங்கெங்கு போனார். எதைக்கொண்டு சென்றார். யாரையெல்லாம் சந்தித்தார். எதை எங்கு வைத்தார் என்பதும் விரைவில் வெளியில் வரும்'' என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசிய விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த கே.பி. ராமலிங்கம்,'ராசா குறித்து நான் கருத்து சொல்லும் அளவிற்கு அவருக்குத் தகுதி இல்லை. அவர் எப்படியெல்லாம் இருந்தார் என்பது திமுகவில் பல ஆண்டுகள் இருந்த எனக்குத் தெரியும்'' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அமலாக்கத்துறை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மேல்முறையீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.