சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டப்பேரவை தொகுதியில் அமமுக வேட்பாளராக அக்கட்சியின் சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்கே செல்வம் போட்டியிடுகிறார்.
இவர் சேலம் மாவட்டம் பூலாவரி பகுதியைச் சேர்ந்தவர். கடந்த 1988 முதல் அஇஅதிமுகவில் கட்சிப் பணி ஆற்றிவந்த இவர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டதும் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
சென்ற 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேலம் தொகுதி வேட்பாளராக களமிறங்கி சுமார் 53 ஆயிரம் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
இவரின் மனைவி ராதா செல்வம் பூலாவரி ஊராட்சி மன்ற தலைவராக தற்போது பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...17 வருடங்களுக்கு பின்னர் ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை வெளியீடு!