ETV Bharat / state

வாடகைத் தாய் விவகாரம்: விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்:அமைச்சர் மா.சு - Medicines out of stock accused EPS

'நடிகை நயன்தாரா விவகாரத்தில் எந்த மாதிரியான விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. விதிமுறைகள் சட்டத்திற்கு உட்பட்டதா என்பது குறித்து முறையான அறிக்கை கிடைத்தவுடன் தெரிவிக்கப்படும்' என்று மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

நடிகை நயன்தாரா வாடகைத் தாய் விவகாரம்-அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்!

author img

By

Published : Oct 16, 2022, 8:42 PM IST

சேலம்: இரும்பாலை பகுதியில் உள்ள சேலம் அரசு மாவட்ட மருந்துகள் கிடங்கில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று(அக்.16) திடீர் ஆய்வு செய்தார். மருந்துகள் தட்டுப்பாடு உள்ளதா? எவ்வளவு மருந்துகள் இருப்பு உள்ளது என்பதை குறித்து மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் மருந்துகள் கையிருப்பு இல்லை என்றும்; மருந்துகள் பொதுமக்களே வெளியே வாங்க செல்லும் அவலம் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எந்தெந்த மருந்துகள் தட்டுப்பாடு என்று கூறியிருந்தாரோ? அதற்கான இருப்பு குறித்தும், மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால் பொதுமக்களை வெளியே வாங்கி வர சொல்லக்கூடாது எனவும், அதை மருத்துவர்களே வாங்கித் தர வேண்டும் என்றும் சேலம் அரசு மருத்துவமனை குறித்து முதலமைச்சர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். எந்தவித குழப்பமும் இல்லாமல் சீராக சென்று கொண்டுள்ளது.

வாடகைத் தாய் விவகாரம்: விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்:அமைச்சர் மா.சு

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பொதுமக்களை மருந்து வாங்கச்சொல்வதாகவும், மருந்துகள் இல்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை உண்மைத்தன்மை என்னவென்று தற்பொழுது தெரிவிக்கிறோம்.

சேலம் மருந்து கிடங்கைப் பொறுத்தவரை பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார சுகாதார நிலையம், மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட மருத்துவமனைக்குத் தேவையான அனைத்து மருந்துகளும் அனுப்பப்பட்டு வருகிறது.

மூன்று மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் தற்பொழுது இருப்பு இருந்து கொண்டுள்ளது. ஒரு சில மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு, வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டால், அதை மருத்துவர்கள் வாங்கிக்கொள்ளவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய ஞான உதயம் பிறந்து, மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மருந்துகள் இருப்பு குறித்து சந்தேகம் இருக்குமானால் மருந்து கிடங்கு மற்றும் மருத்துவமனையில் நேரில் வந்து அவர் ஆய்வு செய்யலாம். யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து எடப்பாடி பழனிசாமி மருந்துகள் இல்லை என்று அறிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் இருந்தால் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கிடங்குகளில் நேரில் வந்து ஆய்வு செய்யலாம். அவர் ஆய்வு செய்வதற்கு அனுமதி தருகிறோம். வழக்கு எல்லாம் போடமாட்டோம்.

எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கையில் கூறியபடி டி.என்.எம்.எஸ்.சியை இழுத்து மூட தேவையில்லை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி வாய்க்கு வந்ததையும், யார் எழுதிக்கொடுப்பதை கூறி வந்தால் சொல்வதற்கு இல்லை. ஏற்கெனவே உள்ள 32 மருந்து கிடங்குகள் மற்றும் புதிதாக 5 மருந்து கிடங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் 10 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனைகளை பத்து மாதங்களில் செய்து முடித்துள்ளோம். பொதுமக்களுக்கு மருந்து தட்டுப்பாடு இருப்பது தெரிந்தால் பொதுமக்கள் 104 என்ற எண்ணிற்குத் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்' என்றார்.

நடிகை நயன்தாரா வாடகைத் தாய் விவகாரம்: ஒரே வீட்டில் 10க்கும் மேற்பட்ட தாய்மார்களை வைத்து நடிகை நயன்தாரா, வாடகைக்கு தாயாகப் பயன்படுத்தி குழந்தை பெற்ற விவகாரம் குறித்த கேள்விக்கு, 'அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட உள்ளது. தனிமனித உரிமை மற்றும் தாய்மார்கள் உரிமையினை காப்பதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படும்.

மேலும் நடிகை நயன்தாரா விவகாரத்தில் முழுமையான விசாரணை அறிக்கை கையில் கிடைத்தவுடன் எந்த மாதிரியான விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன; விதிமுறைகள் சட்டத்திற்கு உட்பட்டதா என்பது குறித்து முறையாக அறிக்கை கிடைத்தவுடன் அறிவிக்கப்படும்' எனவும் கூறினார்.

மருந்துகள் கையிருப்பில் உள்ளது: இதனிடையே சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி கூறுகையில், மருந்துகள் தட்டுப்பாடு என்று கூறிய மருந்து வகைகள் போதிய அளவு இருப்பில் உள்ளன எனவும்; எந்த நோயாளிகளுக்கும் வெளியே மருந்து வாங்கி வரச்சொல்லி கொடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:சென்னையில் நடைபெற்ற துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.