ETV Bharat / state

வீட்டை விட்டுச் சென்ற இளம்பெண்.. 3 நாட்கள் கழித்து கிணற்றில் சடலமாக மீட்பு! - Ranipet crime news

Ranipet news: வீட்டை விட்டுச் சென்ற பெண்ணின் உடல், விவசாயக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டை விட்டு சென்ற இளம்பெண் மூன்று நாட்கள் கழித்து கிணற்றில் சடலமாக மீட்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 12:47 PM IST

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மழையூர் கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி விமலேஸ்வரி தம்பதியிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகள் பிரியங்கா (23) செவிலியர் படிப்பு முடித்து விட்டு, வேலூர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜனவரி 3ஆம் தேதி காலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற பிரியங்கா வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர்.

அப்பொழுது ஊரின் அருகே உள்ள விவசாயக் கிணற்றின் அருகே பிரியங்காவின் காலணி இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்த பிரியங்காவின் பெற்றோர், உடனடியாக கலவை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், விவசாயக் கிணற்றில் குதித்து, தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் நீண்ட நேரம் தேடியும், பிரியங்கா கிடைக்காமல் போனதால், வேறு எங்காவது சென்றிருப்பார் என உறவினர்கள் தெரிவித்ததை அடுத்து, தேடும் பணியானது கைவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரியங்காவின் தாத்தா இன்று (ஜன.5) விடியற்காலை 4 மணி அளவில் கிணற்றில் பார்த்தபோது, பிரியங்காவின் உடல் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, பிரியங்காவின் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அதன் பின் கலவை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்து வந்த காவல் துறையினர் பிரியங்காவின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பிரியங்கா தற்கொலை செய்து கொண்டாரா, தற்கொலை எனில் தற்கொலைக்கான காரணம் என்ன, வீட்டில் ஏதாவது பிரச்சினையா அல்லது பிரியங்கா கொலை செய்யப்பட்டாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் கடந்த ஜனவரி 3ஆம் தேதி தீயணைப்பு வீரர்கள் பிரியங்காவின் உடலை தேடியபோது, அவர் உடல் கிடைக்கவில்லை. தற்போது கிடைத்துள்ளதெனில் இதற்கு நடுவே ஏதேனும் விபரீதம் நடந்திருக்குமோ என்றும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு வீட்டை விட்டுச் சென்ற இளம்பெண்ணின் உடல், விவசாயக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: அரக்கோணம் ஐடிஐ நிலையக் கண்டு ஆசிரியர்களை கடிந்துகொண்ட அமைச்சர் சி.வி.கணேசன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.