ராணிப்பேட்டை: ரத்தினகிரி அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயதான ஓம்கணேஷ். சமீபத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த இவருக்கு கணிதம் மற்றும் உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
தனக்கு ஆர்வமிக்க துறையில் சாதிக்க வேண்டும் என்று எண்ணிய ஓம்கணேஷ் கணிதத்தில் 100 முதல் 1 வரை தமிழ் எண்களை தலைகீழாக, விரைவாக கூற கடந்த சில மாதங்களாக பயிற்சி எடுத்து வந்துள்ளார்.
இதன் பலனாக 28 நொடிகளில் 100 முதல் 1 வரையிலான தமிழ் எண்களை தலைகீழாக கூறி இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய இரண்டு சாதனை புத்தகங்களிலும் இடம் பிடித்துள்ளார்.
இது மட்டுமல்லாது கால்களை நீட்டி செய்யும் வகையான உடற்பயிற்சி ஒன்றை குறைவான நொடிகளில் 65 முறை செய்து கலாம் வோர்ல்டு ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
கணிதம் மற்றும் உடற்பயிற்சி துறைகளில் தனக்கு இருந்த ஆர்வத்தால் இது போன்ற சாதனைகளை செய்துள்ளதாகவும், இதேபோல் பல முயற்சிகளை மேற்கொண்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுவதே தன் கனவு என்றும் ஓம்கணேஷ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வீடு தேடி கல்வித்திட்டம் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்