ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பகுதியைச் சேர்ந்தவர், பன்னீர் செல்வம். இவர் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவர் லஞ்சம் பெற்றதாகக்கூறி, கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி இவரது வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது சுமார் 450 சவரன் தங்க நகைகள், 6.5 கிலோ வெள்ளி, 3 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைப்பற்றப்பட்டது. மேலும் திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய இடங்களில் வாங்கி குவிக்கப்பட்ட அசையா சொத்துகள் தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வத்தின் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ. 7.54 கோடி மதிப்புள்ள சொத்துகளைச் சேர்த்ததாக பன்னீர் செல்வம், அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் சொத்துக்குவிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க : ஊரடங்கு: வீதிகளில் உணவின்றி அல்லல்படும் விலங்குகளுக்கு உதவுங்கள்!