இராமநாதபுரம்: அரிவாளில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே அரிவாளுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய இளைஞர்கள் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து பரப்பி உள்ளனர்.
இதுகுறித்து தகவல் காவல்துறை விசாரித்த போது, சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர் காமராஜபுரத்தை சேர்ந்த மூனிஸ்குமார் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் பிறந்தநாள் கேக்கை அரிவாள் கொண்டு வெட்டி சமூகவலைதளத்தில் பரப்பியது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த சாயல்குடி காவல்துறையினர் மூனீஸ்குமாரின் நண்பர்கள் மாரிகுமார், விஜயபாரதி, தருண், இராமநாதன் ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர். மூனிஸ்குமார் கடலுக்கு சென்று இருப்பதால் வந்தவுடன் அவரை காவல்துறையினர் கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.