ராமநாதபுரம்: ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நரேந்திரசிங் என்ற இளைஞர் கின்னஸ் சாதனைப் படைக்கும் முயற்சியில் இன்று (அக்.7) ராமேஸ்வரத்திலிருந்து தனது ஓட்டத்தைத் தொடங்கினார்.
தினமும் 50 கிலோ மீட்டர் தூரம் ஓடத்திட்டமிட்டுள்ள, இவர் 50 நாள்களில் 2911 கிலோ மீட்டர் தூரம் உள்ள அயோத்தியைச் சென்றடையத் திட்டமிட்டுள்ளார்.
கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சி
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மேல கோபுர வாசல் முன்பு இருந்து புறப்பட்ட அவரது ஓட்டத்தை, மாவட்ட பாஜக தலைவர் முரளிதரன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: கனிம வளம் கொள்ளை - சமூக ஆர்வலர்கள் கண்டனம்