ராமநாதபுரம்: சோழந்தூர் அடுத்து உள்ள சீனாங்குடியை சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கு 19 வயதில் மனிஷா என்கிற மகள் உள்ளார். இவர் அரண்மனை அக்ரகாரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருந்தக பிரிவில் பணியாற்றி வந்தார்.
நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பிற்பகல் மனிஷா வேலை பார்க்கும் மருத்துவமனை மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் மாவட்ட பஜார் காவல்துறையினர், மனிஷாவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மனிஷாவின் தாயார் பரிமலா அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவியைக் கடத்திய கல்லூரி மாணவன் போக்சோவில் கைது