ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி ராமநாதபுரம் அரண்மனையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கல்லூரி மாணவிகள் பங்கேற்ற வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
இதை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் கொடியசைத்து தொடங்கிவைத்தார். அரண்மனையில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மதுரை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள பள்ளி மைதானத்தில் நிறைவடைந்தது.
கடல் கடந்து செல்லும் இந்தியாவில் ஹிட் அடித்த மாருதியின் எஸ்-பிரஸ்ஸோ!
இப்பேரணியில் கல்லூரி மாணவிகள் பங்கேற்று வாக்களிப்பதின் முக்கியத்துவம், 18 வயது நிரம்பியவுடன் வாக்காளர் பட்டியலில் பெயரை இணைத்து வாக்களிக்க வேண்டும், வலிமையான மக்களாட்சியை உருவாக்கிட வேண்டும் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். இதில் சார் ஆட்சியர் சுபத்ரா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.