ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகம்மது இப்ராகிம் என்பவரின் மகள் வர்ஷனா (13). வர்ஷனா தனது தம்பி தங்கையுடன் தோப்பில் உள்ள மரத்தில் ஊஞ்சல் விளையாடி கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக துப்பட்டா கழுத்தில் மாட்டியதில் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
சிறுமி வர்ஷனாவின் உடல் உடற்கூராய்வுக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து தங்கச்சிமடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.