ராமநாதபுரம்: சிவகங்கை மாவட்டம் மைக்கேல்பட்டி புளியால் பகுதியைச் சேர்ந்தவர் தயாநிதி. இவரது நண்பர் சந்திர போஸ். இருவரும் நேற்று (ஜூலை 28) இருசக்கர வாகனத்தில் சென்று தனுஷ்கோடியைச் சுற்றிப் பார்த்துவிட்டு, அங்கு மது அருந்தியுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து கிளம்பி மாலை 6 மணிக்கு மேல், அரியமான் கடலில் இருவரும் சேர்ந்து குளித்துள்ளனர். இதில் தயாநிதி கடலில் குளித்தபோது, அதிக அளவு கடல் நீரை குடித்து கரையில் அமர்ந்திருந்துள்ளார்.
அப்போது மயங்கி கீழே விழுந்த தயாநிதி, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தயாநிதியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர், இது தொடர்பாக உச்சிப்புளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் பத்திரப்பதிவு மேலாளர் வீட்டில் சோதனை