ETV Bharat / state

மாநில அரசுகளைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் சிஐடியு ஆர்ப்பாட்டம் - இராமேஸ்வரத்தில் சிஐடியு சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் சிஐடியு சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

The CITU protested with a social distance in Rameshwaram

author img

By

Published : May 10, 2020, 9:04 PM IST

இந்தியாவில் ராஜஸ்தான், ஹிமாச்சல்பிரதேசம், குஜராத் போன்ற பல மாநிலங்களில் தொழிலாளர்கள் பணி நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக நீட்டித்துள்ளன, மாநில அரசுகள்.

அதேபோல் தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58லிருந்து 59ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனை அந்தந்த மாநில அரசுகள் வாபஸ் வாங்க வலியுறுத்தி, ராமநாதபுரம் சிஐடியு சார்பாக இன்று அண்ணா நகரில் உள்ள மாவட்ட அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.

இது சிஐடியு மாவட்டத்தலைவர் அய்யாத்துரை தலைமையில் நடைபெற்றது. இதில் சிவாஜி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியைக் கடைபிடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். வர இயலாதவர்கள், அவரவர் வீடுகளில் இருந்தவாறே ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதையும் படிங்க:

நிவாரணம் வழங்கக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

For All Latest Updates

TAGGED:

CITU PROTEST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.