ராமநாதபுரம்: இலங்கை முல்லை மாவட்டம் முள்ளிவலை பகுதியைச் சேர்ந்த சிவனேசன். இவரது, மகள் கஸ்தூரி 2018ஆம் ஆண்டு இந்தியா வந்தார். பின்னர், சென்னையிலுள்ள வளசரவாக்கம் பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில், இலங்கைக்கு செல்வதற்காக சட்டவிரோதமாக சென்னையிலிருந்து தனுஷ்கோடி பகுதிக்குச் சென்று அங்கிருந்து கள்ளத்தோணியில் மூன்றாம் தீடைப்பகுதிக்குச் சென்றார்.
அப்பகுதியில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மூன்றாம் தீடைப்பகுதியில் ஒரு பெண் தனியாக இருப்பதாக கடலோர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணை
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல் துறையினர், கஸ்தூரியை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கள்ளத்தோணியில் இலங்கைக்கு செல்ல முயன்றது தெரியவந்தது.
தொடர்ந்து, அப்பெண்ணை ராமேஸ்வரம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தற்போது அவரிடம் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பயணிகளிடம் பணம், செல்போன் திருடிய பெண் கைது