ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய காவல் துறையினரை பணியிட பொதுமாறுதல் செய்யும் உத்தரவை ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திக் பிறப்பித்துள்ளார்.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 42 காவல் நிலையங்களில் பணியாற்றிய 32 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 41 பெண் காவலர்கள், 42 முதல் நிலை காவலர்கள், 71 தலைமை காவலர்கள், 31 காவலர்கள் என 217 காவலர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: டிக் டாக் வீடியோவால் ஆயுதப்படை துணை ஆணையர் பணியிட மாற்றம்