ETV Bharat / state

கடல் அட்டையைக் கடத்த முயன்ற இருவர் கைது! - ramanadhapuram smuggler issue

மண்டபம் அருகே கடல் அட்டையைக் கடத்த முயன்ற இருவரை வனத் துறையினர் கைதுசெய்தனர்.

Smuggling Sea cucumber forest
Smuggling Sea cucumber forest
author img

By

Published : Jul 13, 2021, 10:42 PM IST

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மண்டபம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இலங்கைக்கு மஞ்சள், கடல் அட்டை, போதைப் பொருள்கள் கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதைத் தடுக்கும்விதமாக கடலோரக் காவல்படை, இந்திய கடற்படை, மெரைன், வனத் துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதன்படி, இன்று (ஜூலை 13) காலையில் மண்டபம் வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் குறவன் தோப்புப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது நீலநிறம் வல்லம் ஆழ்கடலை நோக்கிச் செல்வதைக் கண்டு அதனைத் துரத்திச் சென்றனர். வனத் துறையினர் ரோந்துப் படகில் வருவதை அடுத்து கடத்தல்காரர்கள் தப்பித்து ஓட நினைத்து வல்லத்தை இயக்கியுள்ளனர்.

மடக்கிப்பிடித்த வனத் துறை

மணலி, முயல் தீவு அருகே வனத் துறையினர் படகை மடக்கிப்பிடித்தனர். கடத்தல்காரர்கள் வனத் துறையினரைக் கண்டதும் படகில் உயிருடன் இருந்த 500 கிலோ கடல் அட்டையை கடலில் கொட்டியுள்ளனர்.

இருவர் கைது

இதையடுத்து, வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972 இன்கீழ் பாதுகாக்கப்பட்ட கடல் அட்டைகளை கடத்த முயன்ற மீரான் கனி, முகமது நஷீர் ஆகிய இருவரை கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: விளையாட்டால் நேர்ந்த விபரீதம்- நண்பன் உயிரிழப்புக்கு காரணமான இளைஞர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.