ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மறுபுறம் நூற்றுக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ராமநாதபுரத்தில் இரண்டு பெண்கள், சோழந்தூர், வேதாளையில் தலா ஒரு பெண், பரமக்குடியில் மூன்று பெண்கள் என ஏழு பெண்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரத்தில் (8), தொண்டியில் (2), திருவாடானை, கீழக்கரை, நரிப்பையூர், சாயல்குடி, வாலிநோக்கம், கண்ணார்பட்டி, இடையங்குளம், மேலக்கிடாரம், எஸ்.தரைக்குடி, எமனேஸ்வரம் பகுதிகளில் 22 ஆண்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் தனியார் தொலைக்காட்சியைச் சேர்ந்த செய்தியாளரும் ஒருவர், ராமநாதபுரம் மாவட்டத்தில் காரோனா பாதித்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 75 வயது முதியவர், 46 வயத ஆண் என இருவர் இன்று உயிரிழந்தனர் இதனையடுத்து கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்ததுள்ளது.
இதையும் படிங்க: தாய்ப்பால் மூலம் கரோனா பரவுமா?