ETV Bharat / state

மாவட்ட ஆட்சியரின் ஒருநாள் விசிட்... ஆடிப்போன மக்கள்...

இராமநாதபுரம்: மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திடீரென்று பல்வேறு கிராமங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Ramanathapuram district collector Dinesh ponraj Oliver

author img

By

Published : Dec 8, 2020, 6:38 PM IST

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியம், கொடிப்பங்கு கிராமத்தில், உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ 17.70 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகளும், ரூ.6.15 லட்சம் மதிப்பில் புதிதாக சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இக்கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதனையடுத்து வட்டாணம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவுப் பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து அந்தக் கிராமம் அருகே ரூ.9.75 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை மரக்காயர் ஊரணியில் ரூ.6.79 இலட்சம் மதிப்பில் கட்டப்படும் படித்துறை உள்ளிட்டவைகளையும் ஆய்வு செய்தார்.

அதன் தொடர்ச்சியாக தொண்டியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் மருத்துவமனை தரம் குறித்தும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார். மேலும், நோயாளிகளுடன் மருத்துவர்கள் பரிவுடன் நடந்திட வேண்டுமென அறிவுரை வழங்கினார்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.