ராமநாதபுரம்: கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீனவர்கள் 16 பேர், ஒரு வாரத்திற்கு முன்பு ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் என இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். கடந்த மார்ச் 30ஆம் தேதி ஜெகதாபட்டினம் மீனவர்கள் 3 பேர் மற்றும் சிலர், ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்குள் சென்றபோது, 12 பேர் கடந்த 2ஆம் தேதி இரவு சிறைபிடிக்கப்பட்டனர். கடந்த 10 நாட்களில் மட்டும் தமிழ்நாடு மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், மீனவர்களின் 5 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து மீனவர்கள் சங்க கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கவும் பறிமுதல் செய்த படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் ஒன்றிய அரசை வலியுறுத்தியும் மீனவர்கள் கடலுக்குள் செல்லாததால் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கரையில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: இலங்கையிலிருந்து 15 தமிழ்நாடு மீனவர்கள் நாடு திரும்பினர்