இராமநாதபுரம் மாவட்டம் கமுதி - அருப்புக்கோட்டை சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக டாட்டா ஏஸில் வந்த இளைஞரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தபோது அவரிடம் ஒரு நாட்டுத் துப்பாக்கி, 1/2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததில் அவர் விருதுநகர் மாவட்டம் அம்மாப்பட்டி கிராமத்தை சேர்ந்த அஜித் என்கிற விக்னேஷ்வரன் (23) என்பது தெரியவந்தது. மேலும் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் அஜித் மீது ஏற்கனவே 28 வழக்குகள் மற்றும் 2 குண்டாஸ் இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை விருதுநகர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: