ராமநாதபுரம்: திருப்புலிவனம் பகுதியைச் சேர்ந்த ராஜா (24) என்பவர் அப்பகுதியில் பல்வேறு திருட்டுச் செயல்களில் சம்பந்தப்பட்டவர் ஆவார். இவர் 2019ஆம் ஆண்டு வெளிநாட்டிற்குத் தப்பியோடிவிட்டார்.
தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
இதனைத் தொடர்ந்து, ராஜாவை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்தார். இந்நிலையில் தேடப்பட்டுவந்த ராஜா சார்ஜாவில் கட்டடத் தொழிலாளியாகப் பணிபுரிந்துவந்தார்.
இந்த நிலையில், சொந்த ஊர் திரும்ப சார்ஜாவிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் கைது
இந்நிலையில் சென்னை விமான நிலைய குடியுரிமை அலுவலர்களால் மூன்றாண்டுகளாகத் தேடப்பட்டுவரும் ராஜா கைதுசெய்யப்பட்டு ராமநாதபுரம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போலீஸ் ரோந்து வாகனம் உடைப்பு: முக்கியக் குற்றவாளி கைது