ராமநாதபுரம் : ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரூ. 250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாம்பனில் நடைபெற்று வரும் புதிய ரயில் பாலத்தின் பணிகளை தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் ஜான் தாமஸ், ரயில்வே துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜான் தாமஸ், “பாம்பன் புதிய ரயில் பாலத்தின் பணிகள் 50 விழுக்காடு நிறைவடைந்து விட்டது. 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகள் முழுவதும் நிறைவடைந்து அந்த புதிய ரயில் பாலத்தில் ரயில்கள் 80 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும்.
மேலும், பல நூற்றாண்டுகளை கடந்து இயங்கிக்கொண்டிருக்கும் ரயில் பாலம் தற்போது நல்ல நிலையில் உள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து - தனுஷ்கோடிக்கு மீண்டும் ரயில் சேவையை இயக்குவதற்காக எஸ்டிமேட் போடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் செயல்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்கப்பட்டு உள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : தனியார் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய நபரை தாக்கிய காவலர்கள் - ரூ.3 லட்சம் அபராதம்