ETV Bharat / state

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - ஒருவர் உயிரிழப்பு - ராமநாதபுரம் கமுதியில் இருசக்கர வாகன விபத்து

ராமநாதபுரம் கமுதி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

crime news  ramanathapuram latest news  ramanathapuram news  ramanathapuram bike accident  ramanathapuram Kamuthi bike accident  bike accident  accident  விபத்து செய்திகள்  வாகன விபத்து  இருசக்கர வாகன விபத்து  ராமநாதபுரத்தில் இருசக்கர வாகன விபத்து  ராமநாதபுரம் கமுதியில் இருசக்கர வாகன விபத்து  one death and four injured by bike accident
வாகன விபத்து
author img

By

Published : Jul 29, 2021, 8:05 AM IST

ராமநாதபுரம்: கமுதி அருகே புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காளிச்சாமி (18), காளீஸ்வரன் (18), முத்துவழிவிட்டான் (20), மாரிச்சாமி (20) ஆகிய 4 பேரும், பணி முடிந்து, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர்.

அதேசமயம் கமுதி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த சாமுவேல் (55) கூலி வேலை செய்து விட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது குடிக்கினியான் விலக்கு சாலை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் பலத்த காயமடைந்த சாமுவேல், கமுதி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அழைத்து செல்லப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த புதுப்பட்டியை சேர்ந்த நான்கு பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து சாமுவேல் மனைவி சாந்தா கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கமுதி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கந்து வட்டி கொடுமை - 10 பேர் தீக்குளிக்க முயற்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.