ETV Bharat / state

நிலப் பிரச்சனை காரணமாக மூதாட்டி எரித்துக் கொலை! - ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்

திருவாடானை அருகே நிலப் பிரச்சனை காரணமாக மூதாட்டி எரித்துக் கொலை,செய்யபட்ட சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

old-woman-burnt-to-death-due-to-land-dispute
மூதாட்டி பாப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 6:07 PM IST

இராமநாதபுரம்:திருவாடானை அருகே உள்ள அழகமடை கிராமத்தில் நிலப் பிரச்சனை காரணமாக சுப்பையா என்பவரின் மனைவி பாப்பு என்ற 95 வயது மூதாட்டி எரித்துக் கொலை செய்யபட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து திருவாடானை போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ளது அழகமடை கிராமம். இங்கு நாச்சக்குட்டி மகன் சித்திரவேலு (75) என்பவருக்கும் சுப்பையா மகன் துரைராஜ் என்பவர் குடும்பத்திற்கும் இடையே நிலம் தொடர்பாக பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சித்திரவேலு என்பவரது வீட்டை JCP வாகனம் வைத்து துரைராஜ் இடித்து விட்டதாக வழக்கு ஒன்று திருவாடானை காவல் நிலையத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த சூழலில் நள்ளிரவில் துரைராஜ் தாயார் பாப்பு என்ற மூதாட்டி திண்ணையில் கட்டிலில் படுத்து இருந்தார். அதே நேரத்தில் பாப்புவின் மகன் ராசுவும், இவரது மனைவி மங்கையர்க்கரசியும் வீட்டின் உள்ளே படுத்திருந்த போது கதவை கம்பியால் கட்டிவிட்டு, வீட்டு முன், பின் இருபக்கமும் விறகுகளை போட்டு மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துள்ளனர்.

மேலும் வெளியில் படுத்திருந்த மூதாட்டி மீது தீ வைத்து எரிந்து கொண்டிருந்த நிலையில் வீட்டினுள் அனல் வீச பதறியடித்து எழுந்த ராசுவும் மங்கையர்க்கரசியும் கதவை திறக்க முயன்று முடியாமல் போனது. வீட்டில் இருந்த தண்ணீரை எடுத்து பின் பக்கம் ஊற்றி அணைத்து விட்டு பின் பக்க கதவை திறந்து பார்த்த போது சித்திரவேலு தீ பந்தத்தை போட்டு விட்டு ஓடிவிட்டதாகவும், சந்தேகம் வர கூடாது என்பதற்காக தனது வீட்டிற்கும் தீ வைத்து விட்டு தப்பி ஓடியதாக மங்கையர்க்கரசி அழுதுகொண்டே கூறினார்.

சித்திரவேலு வீட்டில் தீ பற்றி எரிந்த சில மணி நேரத்தில் உள்ளே இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இச்சம்பவம் பற்றி தீ அணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.

திருவாடானை காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபாண்டியன், சார்பு ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, தனிபிரிவு காவலர் அருண்குமார் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். நள்ளிரவில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது அந்தக்கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.மூதாட்டி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்த போது சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இதையும் படிங்க :"இதுக்கு மேல் பஸ் போகாது".. சிகரெட் பிடித்தபடி அசால்டாக பதில் சொன்ன ஓட்டுநர்.. வைரலாகும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.