இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு எம்.பி. நவாஸ் கனி விடுத்துள்ள கோரிக்கையில்,"கரோனா பேரிடர் பொது முடக்கம் காரணமாக மூடப்பட்ட பள்ளிக்கூடங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்ல உதவும் வகையில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
குறைவான அரசு பேருந்துகளே இயக்கப்படுவதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மாணவர்கள் பாதுகாப்பின்றி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஆகவே மாணவர்களின் நலன் கருதி கூடுதல் கவனம் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு 100 சதவீத பயிர் காப்பீட்டு தொகை வழங்க நவாஸ் கனி வலியுறுத்தல்!