ETV Bharat / state

ராமநாதபுரத்தில் சாலைகள் தரமில்லை - எம்.பி. நவாஸ் கனி குற்றச்சாட்டு

ராமநாதபுரம்: மாவட்டத்தில் அமைக்கப்பட்ட சாலைகள் தரமில்லை என ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி குற்றஞ்சாட்டியுள்ளார்.

எம்.பி நவாஸ் கனி
எம்.பி நவாஸ் கனி
author img

By

Published : Oct 31, 2020, 7:32 PM IST

ராமநாதபுரத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் ஆப்பனுாரிலிருந்து மங்கலம் வரையிலான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதைப்போல் தமிழ்நாடு கிராமபுறச் சாலைகள் மேம்பாட்டுச் திட்டத்தின்கீழ் சாயல்குடி வேம்பார் சாலையிலிருந்து நரிப்பையூர் கடற்கரை சாலை வரை, மாணிக்கம் நகர் சாலை உள்ளிட்ட சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி கடந்த வாரம் இந்தச் சாலைகளின் தரம் குறித்து ஆய்வுசெய்தார்.

இது குறித்து அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அனைத்துச் சாலைகளும் மிகவும் மோசமான நிலையிலும், தரக் குறைவான நிலையிலும் உள்ளன. சாலைகள் அமைப்பதற்காக அனைத்து உட்பொருள்களும் குறைவாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

சாலைகளில் மாதிரிகளைப் பெற்று அதனை ஆய்வுக்காக அனுப்ப உள்ளேன். மேலும் தரமில்லாமல் அமைக்கப்பட்ட சாலைகளை தேசிய தரக் கண்காணிப்பகம் ஆய்வுசெய்து இச்சாலை தரம் உடையதாக உள்ளது என எந்த முகாந்திரத்தில் சான்று அளித்தது எனக் கேள்வி எழுப்பி உள்ளேன்.

மாநில அரசின் சார்பாக சாலைகளின் தரம் எவ்வாறு ஆய்வு செய்யப்பட்டது என்ற சந்தேகமும் எழுகிறது. எனவே, மேற்கூறிய சாலைகளின் தரத்தை மீண்டும் சோதிக்க தேசிய தரக் கண்காணிப்பகத்திற்கும் மாநில அரசின் தரக் கண்காணிப்பு ஆணையத்திற்கும் பரிந்துரைக்க உள்ளேன்.

மக்களின் வரிப்பணம் வீணாவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தரமில்லாமல் அமைக்கப்பட்ட சாலைகளை மீண்டும் ஒப்பந்த விதிகளில் குறிப்பிடப்பட்டபடி தரமான சாலைகளாக அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதே போன்று ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி முழுவதும் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துச் சாலைகளையும் ஆய்வுசெய்ய உள்ளேன். தரமில்லாமல் போடப்பட்டிருப்பின், அதனை மீண்டும் தரமான சாலைகளாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ராமநாதபுரம் பொதுமக்கள், தன்னார்வலர்கள் கவனத்திற்கு தரமில்லாமல் அமைக்கப்பட்டிருக்கும் சாலைகள், அரசு திட்டங்களைக் கவனத்திற்கு கொண்டுவரவும் முறையாக ஆய்வுசெய்து தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.