ETV Bharat / state

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் வலுப்பெறும் - எம்பி. நவாஸ் கனி

ராமநாதபுரம்: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி தெரிவித்தார்.

caa protest
caa protest
author img

By

Published : Dec 24, 2019, 4:33 PM IST

மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும் அதை ரத்து செய்யக் கோரியும் ராமநாதபுரம் மாவட்ட ஜமாத்தில் உலமா சபை சார்பில் கண்டன பொதுக்கூட்டம் சந்தை திடல் பகுதியில் நடந்தது. இதில் 3000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கூறி பதாகைகளை ஏந்தி நின்றனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி பங்கேற்றார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நவாஸ் கனி, ’இந்திய பொருளாதார வீழ்ச்சியை திசை திருப்ப காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து, குடியுரிமை பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் போன்ற சிறுபான்மையினருக்கு எதிரான போக்கை மத்திய அரசு கடைப்பிடித்துவருகிறது.

இந்த சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டத்தை நிறுத்த போவதில்லை, போராட்டம் வலுப்பெறும்’ என்றார்.

இதையும் படிங்க: அத்துமீறி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கு: ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு!

Intro:இராமநாதபுரம்
டிச.22

குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் இராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி.

Body: மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்தும் அதை ரத்து செய்யக் கோரியும்
இராமநாதபுரம் மாவட்ட ஜமாத்தில் உலமா சபை சார்பில் கண்டன பொதுக்கூட்டம் சந்தை திடல் பகுதியில் நடந்தது. இதில் 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக் கூறி பதாகைகளை ஏந்தி நின்றனர். இதில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி பங்கேற்றார். பின் செய்தியாளர்களை சந்தித்த நவாஸ் கனி கூறியதாவது, இந்திய பொருளாதார வீழ்ச்சியை திசை திருப்ப காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து, குடியுரிமை பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற சிறுபான்மையினருக்கு எதிரான போக்கை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது.
இந்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டத்தை நிறுத்த போவதில்லை, போராட்டம் வலுப்பெறும் என்றார். பல மாநில முதல்வர்கள் இந்த திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என கூறி வருகின்றனர். ஆனால் மத்திய உள்துறை இது அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு அமல்படுத்தி இருப்பதாக கூறி வருகிறது என்றார். இதில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது இந்திய யூனியன் முஸ்லீம் லீக்,எஸ்.டி.பி.ஐ,திமுக, உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.