ETV Bharat / state

காவல் நிலையத்தில் இளைஞர் மரணம்; ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு! - 30lakhs

ராமநாதபுரம் மாவட்டம், எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் அரசு நிவாரணம் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai highcourt
உயர் நீதிமன்ற மதுரை கிளை
author img

By

Published : Aug 2, 2023, 9:57 AM IST

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த எமனேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், எனது சகோதரர் வெங்கடேசன். இவர் தனது மனைவி உடன் வசித்து வந்தார். இவர் மீது பொய்யாக நகை திருட்டு வழக்குப் பதிவு செய்து, இந்த வழக்கிலிருந்து விடுவிக்க போலீசார் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்தனர்.

பின்னர், 2012 ஆம் ஆண்டில் வெங்கடேசனை எமனேஸ்வரம் போலீசார் சட்டவிரோத காவலில் வைத்து விசாரித்தனர். அப்போது அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் போலீஸ் நிலையத்திலேயே அவர் இறந்தார். அவரது உடல் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது அவரது உடலில் பல்வேறு இடங்களில் பலத்த காயங்கள் இருந்தன. இதனால் அவரது இறப்பில் எங்களுக்குச் சந்தேகம் உள்ளது.

எனவே, எனது சகோதரர் இறந்த வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும். அவரது இறப்புக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். என் சகோதரர் இறப்புக்குக் காரணமான போலீஸ்காரர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் ஆஜராகி; ஏற்கனவே இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வெங்கடேசனின் தாயாரிடம் 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக முதற்கட்டமாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். மேலும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் சகோதரனின் மரணத்திற்கு இழப்பீடு கேட்டும் சம்பந்தப்பட்ட காவல்துறை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கைப் பொறுத்தவரைச் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துறை ரீதியான நடவடிக்கை ஏற்கனவே எடுத்து உள்ளார்.

மேலும், வழக்கும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே காவல் நிலையத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு இறந்து போன நபரின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையாக 30 லட்சம் ரூபாய் இழப்பீட்டை அரசு இரண்டு மாதத்தில் வழங்க வேண்டும். அந்த தொகையில் ஏற்கனவே கொடுத்த ரூ.5 லட்சத்தைக் கழித்துக் கொள்ளலாம் என்று நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க:"பிராயசித்தம் தேடுவதற்கே அண்ணாமலை நடைபயணம்" - அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.