ராமநாதபுரம் : கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதி கட்டட பணிகளுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி வைத்தார். 345 கோடி ரூபாயிலான இந்த மருத்துவக் கல்லூரி பணிகள் முடிவாகும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், இதற்கான தகுதிகளை ஆராய்ந்து மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிப்பதற்காக இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் ஆறு பேர் அடங்கிய குழு நேற்று (ஆக.10) ராமநாதபுரத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
இந்திய மருத்துவ கவுன்சில் குழுவினர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு பகுதியாகச் சென்று மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான கட்டமைப்பு வசதிகள், புதிய கட்டுமான பணிகள் வரும் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப நடைபெற்று வருகிறதா என்பது குறித்தும் தற்போதைய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் எண்ணிக்கை, தேவைப்படும் பணியாளர் எண்ணிக்கை உள்ளிட்டவைகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படும் என ஆய்வு நடத்திய இந்திய மருத்துவ கவுன்சில் குழுவினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : சொகுசு கார் விவகாரம் - நுழைவு வரி செலுத்தினார் விஜய்!