ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பணியாற்றி வந்தார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் மே 15ஆம் தேதி சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சைப் பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார். இதனையடுத்து மணிகண்டனின் திருவுருவப் படத்திற்கு கடலாடி காவல் நிலையத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின் சக காவலர்கள் மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினர்.