ETV Bharat / state

கடலில் தத்தளித்த மீனவர்கள் - உதவிக்கு வராத கடலோர காவல் படை

கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்க கடலோர காவல் படை வராததால் உயிருக்குப் போராடிய மீனவர்களை சக மீனவர்களே பத்திரமாக மீட்டனர்.

கடலில் தத்தளித்த மீனவர்கள்
கடலில் தத்தளித்த மீனவர்கள்
author img

By

Published : Sep 14, 2021, 4:08 PM IST

ராமநாதபுரம்: திருவாடானை தாலுகா நம்புதாளை மீனவ கிராமத்திலிருந்து நேற்று (செப்.13) மாலை 3 மணியளவில் நான்கு மீனவர்கள் படகில் மீன்பிடிக்கச் சென்றனர். கடல் சீற்றம் காரணமாக அவர்கள் சென்ற படகு கவிழ்ந்து நடுக்கடலில் சிக்கி உயிருக்குப் போராடி வந்தனர்.

அப்போது, அவர்களிடமிருந்த செல்போன் மூலம் கரையில் இருந்த மீனவர்களை தொடர்பு கொண்டு தங்களின் நிலை குறித்து தெரியப்படுத்தினர்.

கடலில் தத்தளித்த மீனவர்கள்

இதுதொடர்பாக கடலோர காவல் படையினரிடம் சென்று நிலைமையை எடுத்துரைத்தனர். ஆனால், அவர்கள் மாலை 6 மணிக்கு மேல் தங்களால் பணி செய்ய இயலாது என பொறுப்பற்ற முறையில் பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு

இதையடுத்து, கரையில் மீனவர்கள் ஒன்று திரண்டு கடலுக்குச் சென்று கடலில் தத்தளித்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நான்கு மீனவர்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதையும் படிங்க: ஆந்திராவிலிருந்து 2 மாத போராட்டத்திற்குப் பின் படகை மீட்டுவந்த மீனவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.