ராமேஸ்வரத்தில் நேற்று (பிப்.07) ஹீலியம் நிரப்பப்பட்ட ராட்சத பலூனில், ஒரே நேரத்தில் 100 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பேஸ் சோன் இந்தியா (Space Zone India), மார்டின் குரூப்ஸ் ஆகியோர் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் அரசினர் மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் தேவேந்திரன், 11ஆம் வகுப்பு பயிலும் கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டு மிகச் சிறிய செயற்கை கோளை செலுத்தி கின்னஸ் உலக சாதனை முயற்சியில் ஈடுப்பட்டனர்.
இதையடுத்து இன்று (பிப்.8) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின்னர் ராமேஸ்வரம் சென்று சாதனை படைத்த இரு மாணவர்களுக்கும் ஆட்சியர் சண்முகசுந்தரம் சால்வை அணிவித்து, கேடயம் வழங்கி ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கி கௌரவித்தார்.
இதையும் படிங்க... பட்டயக் கணக்காளர் தேர்வில் முதலிடம் பிடித்த சேலம் மாணவர்!